[தோழியும் செவிலியும் உள்ளுறை கூறுமாறு இவ்வாறெனல்] 306. | தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற் குரியர் கொள்வழி யான. |
இது தோழியுஞ் செவிலியும் உள்ளுறையுவமங் கூறுமிடமுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாற்றான் உள்ளுறையுவமங் கூறப்பெறுப தோழியுஞ் செவிலியும் என்றவாறு. Êகாலமுமிடனும் பொருந்துதலென்பது வெளிப்படக் கிளவாது 1முன்னத்தான் மறைத்துச் சொல்லவேண்டியவழி அவ்வாறு சொல்லப்பெறும் அவருமென்றவாறு. இங்ஙனம் கூறவே, “ஏனோர்க் கெல்லா மிடம்வரை வின்று.” (302) என்றவழி எல்லாரும் உள்ளுறையுவமஞ் சொல்லப்பெறுவரென்பது பட்டது; அதனை நற்றாயும் ஆயத்தாருந் தந்தையுந் தன்னையரும் உள்ளுறையுவமை கூறப்பெறாரெனவுந், தோழி கூறின் நிலம் பெயர்ந்துரையாத பொருளான் ஒருவழிக் கூறுமெனவுஞ், செவிலிக்காயின் இடம் வரைவின்றெனப்பட்ட வகையாற் பொருந்தும்வழிக் கூறுதற்குரியளெனவுங் கூறினானாம் இச்சூத்திரத்தானென்பது. கொள்வழியென்றதனாற் தோழிக்குப்போல நிலம் பெயர்ந்துரையாத பொருளான் உள்ளுறையுவமங் கூறுதலே செவிலிக்கு முரித்தென்பது கொள்க. மற்2றிவையெல்லாம் அகப்பொருட்கே யுரியவாக விதந்தோதியதென்னை? புறப் பொருட்கு வாராதனபோலவெனின் ஆண்டு வருதல் அரிதாகலின் இவ்வாறு அகத்திற்கே கூறினானென்பது. “வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரு மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந.” (புறம். 42) என்றக்காற், பகை வேந்தரை வென்றிகொள்ளுங்கால் 3அவர் தாமே தத்தம் பொருள் பிறர்க்களிப்பாரென்னும் பொருள்
1. முன்னம்--குறிப்பு. 2. இவை--இவ்வுள்ளுறைகள். 3. வன்புலம் மென்புலம் என்றதனானே வென்றோர் வலியர் என்பதும் தோற்றோர் மெலியர் என்பதும், மெலியார் வலியார்க்குத் திறை கொடுப்பர் என்பதும் உள்ளுறையாகத் தோன்றிற்றென்று கொண்டார்போலும். |