1ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக் கூறுதலும், 2ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோருவமை நாட்டுதலும், 3உவமையும் பொருளும் முற்கூறி நிறீஇப் பின்னர் மற்றைய ஒவ்வாவென்றலும், 4உவமைக்கு இருகுணங் கொடுத்துப் பொருளினை வாளாது கூறுங்கால் உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை ஒன்றற்குக் கூறாது கூறுதலும், 5ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொரு குணங்கொடுத்து நிரப்புதலும், 6ஒவ்வாக்கருத்தினான் ஒப்புமை கோடலும், 7உவமத்திற்கன்றி உவமத்திற்கு ஏதுவாகிய பொருட்குச் சில அடைகூறி அவ்வடையானே உவமிக்கப்படும் பொருளினைச் சிறப்பித்தலும், 8உவமானத்தினை உவமேயமாக்கியும் அது விலக்கியுங் கூறுதலும், 9இரண்டு பொருளானே வெவ்வேறு கூறியவழி ஒன்று ஒன்றற்கு உவமையென்பது கொள்ளவைத்தலும் இன்னோரன்ன வெல்லாம் வேறுபடவந்த உவமத் தோற்றமெனப்படும். இவற்றைக் கூறிய மருங்கிற் கொளுத்துதலென்பது, முற்கூறிய ஏனையுவமத்தின்பாலும் பிற்கூறிய உள்ளுறையுவமத்தின் பாலும் படுத்துணரப்படுமென்பது. ஏனையுவமத்தின்பாற்படுத்தலென்பது வினை பயன் மெய் உரு என்ற நான்கும்பற்றி வருதலும் அவற்றுக்கு ஓதிய ஐவகை நிலைக்களனும்பற்றி வருதலுமெனக் கொள்க. உள்ளுறையுவமத்தின்பாற்படுத்த லென்பது, இவ்வேனையுவமம்போல உவமையும் பொருளுமாகி வேறுவேறு விளங்கவாராது குறிப்பினாற் கொள்ள10வருதலின் இக்கருத்தினானே 11இதனை12ஈண்டு வைப்பானாயிற்று.
1. இது தேற்றவுவமையுளடங்கும். 2. இது பிறிது பொருளுவமை. 3. இது வேற்றுமையணி. 4. மறு பொருளுவமையுளடங்கும். 5. பல பொருளுவமையுளடங்கும். 6. கருத்துவமையுளடங்கும் 7. மறுபொருள் உவமையுளடங்கும் 8. தற்குறிப்பேற்றம். 9. எடுத்துக்காட்டுவமை. 10. வருதலின் என்பது வருதல், என்றிருத்தல் வேண்டும். 11. இதனை--இவ்வேறுபட வந்த உவமத்தினை. 12. ஈண்டு--உள்ளுறையுவமை அதிகாரப்பட்ட இடத்து. |