பக்கம் எண் :

18மெய்ப்பாட்டியல்

என்பது, நெஞ்சினை வேறு நிறீஇக் கூறினமையிற் 1பிறன்கட் டோன்றிய பிணியெனப்படும். இதனுள்,

“சேய ளரியோட் 2படர்தி”

என்றமையின் இது பிறன்கட்டோன்றிய. வருத்தமும் வந்த தாயிற்று.

3”யான்ற னறிவ றானறி யலளே.”

குறு.-337)

என்பது, தன்கட்டோன்றிய வருத்தம்பற்றி வந்த இளிவரல்; என்னை? அது பின்னின்ற தலைமகன் கூறியதாகலின்.

“ஒன், றிரப்பான்போ லிளிவந்துஞ் சொல்லும்”

(கலி-47)

என்பது பிறன்கட்டோன்றிய 4வருத்தம்பற்றி வந்தது; என்னை? அவன் இவ்வாறொழுகுதல் நமக்கு இளிவரலாமென்னுங் குறிப்பினாற் கூறிக் குறை நயப்பித்தமையின்.

“வலியரென 5வழிமொழியலன்
 மெலியரென மீக்கூறலன்.”

(புறம்-239)

எனத் தன்கண்ணும் பிறன்கண்ணுந் தோன்றிய மென்மைபற்றி இளிவரல் பிறந்தன; என்னை? மெலியார் இளிவந்தன கூறுவராயினும் வலியார் மீக்கூறுவராயினும் இவன் அவை செய்யா னென்றலின்.

6”ஒருகை யுடைய தெறிவலோ யானு
 மிருகை சுமந்துவாழ் வேன்.”

(ப-207)


1. பிறன் என்றது நெஞ்சினை.

2. படர்தி என்றது விரும்புகின்றாய் என்றபடி. விரும்புதல் பற்றி முயற்சிபற்றி வந்ததென்றார்.

3. யான், அவள் வருத்தும் பருவமுடையள் என்பதை அறிவேன். எனவே இளையள் விளைவிலள் என்னாதி; என்னை வருத்தும் பருவம் உடையள் என இரந்து பின்னின்ற தலைமகன் கூறினமையின் தன்கட்டோன்றிய வருத்தமாயிற்று. இரந்து பின்னிற்றல்--வருத்தம் (முயற்சி); இதனால் அவற்கு இளிவரல் பிறந்தது.

4. இரப்பான்போல் இளிவந்து கூறல்--வருத்தம் (முயற்சி).

5. வழிமொழியலன் என்பது--தன் மென்மைதோன்ற நின்றது. மெலியர் என்பது பிறர் மென்மைதோன்ற நின்றது.

6. ஒரு கையுடையது--யானை. எறிவலோ என்றமையான். எறிதல் வீரத்திற்கு இழுக்காகும் என்றபடி.