என்பது வீரம்பற்றி இளிவரல் பிறந்தது; 1இது, தன்கண்ணும் பிறன்கண்ணுந் தோன்றாமையின் இலேசினாற் கொண்டா மென்பது. (6) [மருட்கைச்சுவை இத்துணையது எனல்] 255. | புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே. |
இது, வியப்புணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : புதிதாகக் கண்டனவும், கழியப்பெரியவாயினவும், இறப்பச் சிறியனவும், ஒன்று ஒன்றாய்த் திரிந்தனவுமென நான்கும் பற்றி வியப்புத்தோன்றும் என்றவாறு. ‘மதிமை சாலா மருட்கை’ என்பது, அறிவினை உலக வழக்கினுள் நின்றவாறு நில்லாமற் றிரித்து வேறுபடுத்து வருவதென்றவாறு. இவையுமெல்லாம் மேலனபோலத் தன்கட்டோன் றினவும் பிறன்கட்டோன்றினவுமென எட்டாதலுடைய. “மலர்தார் மார்ப னின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி யவரு ளாரிருட் கங்கு லணையொடு பொருந்தி யோரியா னாகுவ தெவன்கொ 2னீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே.” (அகம்-82) என்பது, தன்கட்டோன்றிய புதுமைபற்றி வியப்புப் பிறந்தது; என்னை? தன் கருத்து வெளிப்படாது தன்மெய்க்கட்டோன்றிய புதுமையைத் தலைவி வியந்தாள் போலத் தோழிக்கு அறத்தொடு நின்றமையின்.
1. இவ்விளிவரல் தன்கண் பிறந்ததுமன்று. பிறன்கண் பிறந்ததுமன்று. வீரத்தின்கண் பிறந்தது என்றபடி. என்றது தனக்கும் இகழ்ச்சியாகாது யானைக்கும் இகழ்ச்சியாகாது வீரத்திற் கிகழ்ச்சியாமென்றபடி. இவ்விளிவு இரண்டிடத்தும் இல்லை. வீரத்திலுண்டு என்பது கருத்து. செயலால் வந்ததாகலின் வீரத்தில் இழிவுதோன்றும் என்க.” விலங்காமென மதவேழமு மெறியான்” என்பது சிந்தாமணி. 2. கண்டோர் பலருள் தனக்குமாத்திரம் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோளானமை. புதுமை. ஆதலிற் புதுமைபற்றிய வியப்பு. புதுமை -- முன்னில்லாதன தோன்றினமை. |