பக்கம் எண் :

பொருளதிகாரம்195

7. தனது பார்ப்பைத் தின்னும் அன்பில்லாத முதலையோடு வெள்ளிய ஆம்பற்பூவையுடைய பொய்கையையுடையது அவனூரென்று சொல்வர். அதனால் தன் சொல்லை மெய்யென்று கொண்டாரது மேனியைப் பொன்போற் பசப்புறச் செய்வான் ஊரன்.

(ஐங்குறு. 41)

302-ம் சூத்திரம்

1. கரிய கோட்டினையும் சிவந்த கண்களையுமுடைய ஈன்றணிமையை யுடைய எருமை ஆவானது தன் காதலையுடைய குழவிக்கு, ஊறுகின்ற முலையை வாய்ப்பெய்தூட்டும் நுந்தையின் நுமதூர்க்கு வருவேம். ஒள்ளிய வளையையணிந்த மடந்தையே! நின்னை யாம் வரையுமாட்சிமை பெற்றால்.

(ஐங்குறு. 92)

303-ம் சூத்திரம்

இச்சூத்திர உதாரணங்கள் முன்வந்துள்ளன ஆதலால் உரை எழுதவில்லை.

304-ம் சூத்திரம்

1. அன்னையே! கழியிடத்துள்ள முள்ளி மலருகின்ற குளிர்ந்த கடற் சேர்ப்பன் எனது தோள்களை விரும்பாது துறந்தானாயின் அவன் விரும்பிய தோள் வேறு யாதாம். எவன் என் என மருவிற்று. கொல் அசை. ‘எவன்கொல்’ என்றும் பாடமுள்ளது.

(ஐங்குறு. 108)

2. குன்றக்குறவனது புல்லால் வேய்ந்த சிறுகுடிலாகிய மன்றை அசைகின்ற இளைய மேகங்கள் மறைக்கின்ற நாட்டையுடையோன் உயர்ச்சியையுடையோன். வாழ்வாயாக, தோழி! விரைந்து பெய்கின்ற அரிய நீர்த்துளிகளை அளைந்த கூதிர்க்காலத்துப் பெரிய தண்ணிய வாடையினும் முற்பட்டு வந்தான்.

(ஐங்குறு. 253)

306-ம் சூத்திரம்

1. வன்னிலத்தினின்றும் வந்த சுற்றத்தார்க்கு விருந்து செய்யும் மென் புலத்தூர்களையுடைய நல்ல நாட்டையுடைய வேந்தே!

(புறம். 42)

2. தாய் சாவப் பிறக்கும் புள்ளியையுடைய நண்டினோடு தன் பிள்ளையைத் தின்னும் முதலையையுடையது அவனூர்!

(ஐங்குறு. 42)

307-ம் சூத்திரம்

1. பூமியைக் காக்குமரசர் வழிபாடு சொல்லி நடக்க நுகரும் இன்பத்தை விரும்பிப் பூமி பிறவேந்தருக்குப் பொதுவென்