னும் வார்த்தைக்குப் பொறாது தன்னாடு இடஞ் சிறிதென்னும் மேற்கோள் செலுத்த மடியாத உள்ளத்தையும் பொருளைப் பாதுகாவாது வழங்கும் வண்மையையும் வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படையையுமுடைய சேரலாதனை எவ்வாறொப்பை, தடைப்பட்டுச் செல்லும் கதியையுடைய மதிமண்டிலமே! காலத்தை நீ தோற்றுதற்கென வரைந்து கொள்கின்றாய் (இராப்பொழுதை நினக்கென வரைந்துகொள்கின்றாய் எனினுமாம்) தோற்றார் போன்று ஒளி மழுங்கிச் செல்கின்றாய் (வெஞ்சுடர் மண்டலத்திற்குப் புறங்கொடுத்துச் செல்கின்றாய் எனினுமாம்) திங்கடோறும் மாறிமாறித் தோன்றுவாய். (திசைமாறித் தோன்றுவாய் எனினுமாம்) மலை சார்ந்தவழி அதன்கண் மறைந்து ஒளிப்பாய். அகன்ற பெரிய வானின்கண்ணும் பல கிரணங்களையும் பரப்பிப் பகலில் விளங்காய். இதனுட் சில பாட பேதங் கொண்டு வெங்கதிர் மண்டிலத்திற்கேற்பப் பொருளுரைப்பர் புறநானூற் றுரையாசிரியர். (புறம். 8) 2. அவன் கண்ணன் என்ற பெயருடையோன். இவன் மாறன் என்ற பெயருடையோன். அவற்கு மாலை கமழுந் துழாஅய் மாலை. இவற்கு மாலை வேப்பம் பூமாலை. நிறமும் அவன் கரியோன். இவன் செய்யன். ஒன்றாகிய மரபும் அவன் இடையன். இவன் அரசன். எனவே அவனினும் இவனுயர்ந்தவன் என்றபடி. இது உயர்ச்சிபற்றி வந்த பொருள் வேற்றுமை. பெயரும் பொருளாதலின். 3. அடியை நோக்கின் கடல்வண்ணனாகிய திருமாலையொப்பன். மேனியினியல்பை நோக்கின் பசிய கொன்றை மாலையை யணிந்தோனை (சிவனை) ஒப்பன். முடியை நோக்கி அவன் தலையின்மேல் ஆத்திப் பூமாலை தோன்றியது கண்டு தேரையுடைய சோழனாதல் தெளிந்தேன். (தண்டி. ப. 39.) 4. கோதையை இந்திரனென்னில் அவற்கு ஆயிரங்கண் இவனுக்கு கண் இரண்டே உள்ளன. ஆதலால் அவனல்லன். சிவனென்னின் அவனுக்குப் பிறையுண்டு. இவற்கில்லை. ஆதலால் அவனுமல்லன். வானிலுள்ள கோழிக்கொடியோன் (முருகன்) என்னில் அவற்கு முகமாறு இவற்கு ஒன்று. ஆதலாலவனுமல்லன். இவனை சக்கரத்தையுடைய திருமாலென்று உணரற்பாற்று. (முத்தொள்ளாயிரம்) 5. பொற்றொடீஇ! வளைந்த வில்லையுடைய காமனும் சோழவரசனாகிய வெற்றி பொருந்திய கிள்ளியும் நிறத்தாலொவ்வார். ஏனெனில் திருமாலின் மகன் (காமன்) கருநிறத்தன். உறையூரையுடைய சோழன் மகன் செந்நிறத்தன். 6. சோழனுந் திருமாலும் தொழிலின் வகையான் இன்று வேறுபடுவர். ஏனெனின்? சோழன் எதிர்த்துக் கொன்று பகைவர்பா |