லெய்திய பூமியை, மாயன் இன்று மாவலிபால் கையேற்று இரந்து பெற்றமையால். 7. ஊரின்கணுள்ள சிறுபிள்ளைகள் தன் கோட்டைக் கழுவுதல் காரணமாக நீரையுடைய துறைக்கட் படியும் பெரிய களிறு அவர்க்கு எவ்வாறு இனிதாம். அவ்வாறு பெரும! நீ எங்களுக்கினியை. மற்றதனுடைய மதம் பட்ட நிலைமை (அவர் போல்வார்க்கு) எவ்வாறு இன்னாதாம் அதுபோலப் பெரும! நீ நின் பகைவர்க்கு இன்னாய். (புறம். 94) 8. முதிர்ந்த கோங்கின் இளமுகை போலவும் அடிவரைந்து தோற்றின (தென்னையின்) குரும்பை போலவும் மழைத் துளியிலுண்டான குமிழி போலவும் பெருத்த நின்னிளைய முலை. (கலி. 56) 9. வடிவான் முழுது மக்களையொப்பர் கயவர். அக் கயவரை யொப்பாரை யாங் கண்டதில்லை. (குறள். 1071) 10. நெடிய ஓலைகளையுடைய கரிய பனையினது நீரின்கண் தோற்றும் நிழலை ஒப்பக் குறிய பலவாகி முரிவுபட்ட குன்றின் மீதுள்ள சிறிய வழி. 11. மண்ணுலகைச் சுமக்கின்ற தோளையுடைய கிள்ளியின் மதயானை பகையரசரின் வெள்ளைக் குடையைத் தேய்த்த கோபத்தால் விண்ணிலும் புகுந்து பாயுமோ என்று குளிர்ந்த சந்திரன் அவ் விசும்பினின்று தேய்வான். (தண்டி. ப. 58) 12. எழுத்துக்களெல்லாம் அகரமாகிய முதலையுடையன. அதுபோல, உலகம் ஆதிபகவனாகிய முதலையுடைத்து. (குறள். 1) 309-ம் சூத்திரம் 1. பொருள் முன் எழுதப்பட்டது. 2. வில்வீரர் தம் தூணி நிறையப் பெய்த கொற்றொழிலாற் பொலிந்த கூரிய குறிய மொட்டம்பின் நுனையையொப்ப அரும்புகளை யீன்ற இருப்பையின் செப்புத் தகட்டை யொத்த சிவந்த குழையின் அகந்தோறும் வெண்ணெய்த் திரளையொத்த இனிய துளையையுடைய துய்போலும் வாயைக் கொண்ட பூக்கள் தாள்நீக்கிக் கண்ட துளையை யுடையனவாய் ஆர்க்கை விட்டுக் கழன்று வானினின்று விழும் ஆவிபோலக் காற்றாற் சிதறி வீழப் பவளம் போன்ற சிவந்த மேட்டையுடைய வழியிடத்தே இரத்தத்தின் மேலுள்ள நிணம்போலத் தாங்கும் காடு என்க. இவற்றில் வரும் உவமைகளும் தன்மை தோன்றக் கூறியனவேயாம். (அகம். 9) |