கூறிய ஓத்தும் 1ஆகுபெயரான் மெய்ப்பாட்டியலென்றாயிற்று, மேலோத்தினோடு இவ்வோத்தினிடை இயைபென்னையோ வெனின், 2மேலை ஓத்துக்களுட் கூறப்படும் ஒழுகலாற்றிற்கும் 3காட்டலாகாப்பொருள் (தொ. பொ. 53) என்றவற்றிற்கும் எல்லாம் பொதுவாகிய மனக்குறிப்பு இவையாகலின் இவற்றை வேறுகொண்டு ஓரினமாக்கி மெய்ப்பாட்டியலென வேறோரோத்தாக வைத்தமையானே4எல்லாவற்றோடும் இயைபுடைத்தென்பது. இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், அம்மெய்ப்பாடு 5பிறர் வேண்டுமாற்றான் இத்துணைப்பகுதிப்படு மென்றுணர்த்துத னுதலிற்று. இதன் பொருள் : 6பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருளும்--முடியுடைவேந்தருங் குறுநிலமன்னரு முதலானோர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங்கேட்டுங் காம நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும், கண்ணியபுறனே நானான்கு என்ப--அவை கருதிய
மெய்ப்பாடு என்பது பேராசிரியர் கருத்தாம். இனி, இளம்பூரணர் அச்சமுற்றான்மாட்டு நிகழும் அச்சம் அவன்மாட்டுச் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாகுந்தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும் என்றும், மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று என்றுங் கூறுவர். இது சிறந்த கருத்தேயாகும். சத்துவம் -- விறல். அது,-- “சத்துவ மென்பது சாற்றுங் காலை -- மெய்ம்மயிர் குளிர்த்தல் கண்ணீர் வார்தல் -- நடுங்கல் கடுத்தல் வியர்த்த றேற்றங் -- கொடுங்குரற் சிதைவொடு நிரல் பட வந்த -- பத்தென மொழிப சத்துவந் தானே” என்பதனாலறிக. குளிர்த்தல் -- குற்சிதங்கொள்ளல் = சிலிர்த்தல். 1, மெய்ப்பாட்டியல் -- மெய்ப்பாட்டி னிலக்கணங் கூறுவதென அவ்வோத்தின்மேனிற்றலின் ஆகுபெயர். இதுபோன்றன தொல்காப்பியர் கூறிய. ‘இருபெயரொட்டு’ என்பது சேனாவரையர் முதலியோர் கருத்தாம். 2. மேலையோத்துக்களுட் கூறப்படும் ஒழுகலாறென்றது அகத்தொழுக்கம் புறத்தொழுக்கங்களை. அவை முன்னுள்ள ஐந்தியல்களானும் கூறப்படுவனவாதலின் மேலையோத்துக்க ளென்றார். கூறப்படும் -- கூறப்பட்ட என்றிருப்பது நலம். 3. “ஒப்புமுருவும்” பொருளியல் 53 - ம் சூத்திரம். 4. எல்லாவற்றோடும் -- மேற்கூறிய எல்லாவியல்களோடும். 5, பிறர் -- நாடக நூலார். 6, பண்ணை -- விளையாட்டு. பண்ணை -- விளையாட்டாயம் என்றும், பண்ணையுடையது பண்ணை என்றும் இளம்பூரணர் கூறுவர். |