பொருட்பகுதி, பதினாறாகி அடங்கும் நாடக நூலாசிரியர்க்கு என்றவாறு. 1அது முதனூலை நோக்கிக் கூறியவாறுபோலும். முப்பத்திரண்டாவன யாவையெனின்,-- ஒன்பது சுவை யெனப்பட்டவற்றுள் 2உருத்திரமொழிந்த எட்டனையுங் கூறுங்காற் சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழுங் 3குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணீரரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலு முதலாக உடம்பின்கண் வரும் வேறுபாடாகிய 4சத்துவங்களுமென நான்காக்கி, அச்சுவை யெட்டோடுங் கூட்டி, ஒன்று நான்கு செய்து உறழ, முப்பத்திரண்டா மென்பது. எனவே, சுவைப்பொருளும், சுவையுணர்வும், குறிப்பும், விறலுமென நான்காயின. விறலெனினுஞ் சத்துவமெனினும் ஒக்கும். சுவைப்பொருளென்பன:--அறுசுவைக்கு முதலாகிய வேம்புங் 5கடுவும் உப்பும் புளியும் (மிளகும்) கரும்பும் போல்வன; அவையாமாறு:-- நகைச்சுவைக்குப் பொருளாவன 6ஆரியர் கூறுந் தமிழும், குருடரும் முடவருஞ் செல்லும் 7செலவும், 8பித்தரும் களியரும் சுற்றத்தாரை இகழ்ந்தாரும் குழவி கூறும் மழலையும் போல்வன. அச்சப்பொருளாவன:--
1. அது--அவ்வாறு அடங்கல். முதனூல்--அகத்தியம். 2. உருத்திரம்--வெகுளி. உருத்திரமொழிந்த எட்டாவன: நகை, அழுகை, இளிவரல், வியப்பு, அச்சம், வீரம், உவகை. சமநிலை என்பன. ‘உருத்திரமொழித்து ஒழிந்த’ எனவும் பாடம். 3. குறிப்பு--நகை முதலிய சுவைக்குறிப்பு. 4. சத்துவம்--விறல்; உடம்பின் கணுண்டாகும் வேறுபாடு. அவை முற்கூறப்பட்டன. 5. கடு--கடுக்காய். அது துவர்ப்புக்குக் காட்டப்பட்டது. உறைப்புக்குரியமுதலே சொல்லப்படவில்லை. அது மிளகு என்று கூறலாம். அது தப்பிற்றுப்போலும். 6. ஆரியர்--வடமொழியாளராகிய ஆரிய தேசத்தவர். அவர் தமிழை எழுத்து நிரம்பக் கூறமாட்டாராதலின் அதுவும் நகைக்கேதுவாயிற்று. 7. செலவு--நடை. 8. பித்தர் முதலியோர் சொற்களும் நகைக்கேதுவாகலின் அவர்களையுங் கூறினார். நகைச்சுவைப் பொருள் களிவையெனச் |