1”வள்ளெயிற் றரிமா வாள்வரி வேங்கை முள்ளெயிற் றரவே முழங்கழற் செந்தீ யீற்றா மதமா வேக பாதங் 2கூற்றங் கோண்மா குன்றுறை யசுணம்.” என்று சொல்லப்பட்டனவே போல்வன. இவற்றைச் சுவைகோடலென்பதென்னையெனின், நகையும் அச்சமு முதலாகிய உணர்வு முற்காலத்து உலகியலான் அறிவானொருவன் அவற்றுக்கு ஏதுவாகிய பொருள்பிற கண்டவழித் தோன்றிய பொறியுணர்வுகள் அவ்வச் சுவையெனப்படும். வேம்பென்னும் பொருளும் நாவென்பொறியுந் 3தலைப்பெய்த வழி
செயிற்றியங் கூறுமாறு:-- “உடனிவை தோன்றுமிடம் யாதெனினே--முடவர் செல்லுஞ் செலவின் கண்ணும்......தோன்று மென்ப துணிந்திசி னோரே” என்பது. இதனை இளம்பூரணம் நோக்கியறிக. 1. அரிமா--சிங்கம். வேங்கை--புலி. அரவு--பாம்பு. தீ--நெருப்பு. ஈற்றா--ஈன்றணிமையான பசு. “புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி” (அகம். 56) என்பதனாலறிக. மதமா--யானை. ஏகபாதம்--ஒற்றைக்கால். அது, பூதங்களுளொற்றைக்காலுடை யனவுமிருப்பதாகச் சில புராணங்கூறலின் அவற்றை உணர்த்தும். “ஒற்றைத் தாளின மூன்றுடைத் தாளின வுரைசால் பொற்றைத் தாள்பல வுடையன பொருந்துதா ளொழிந்த கற்றைச் செம்மயி ருடையன கணங்கணக் கிறந்த மற்றைக் கைகளு மன்னதன் மையவென வழங்கும்.” என்பது உபதேச காண்டம்,” கைலைமான்மியச் சருக்கம், 36-ம் செய்யுள். சேது புராணமும் பூதங்களுள் ஒற்றைக்காலுடையனவிருப்பதாகக் கூறுகின்றது. தேவர்களு ளொருபகுதியார்க்கும் ஒற்றைக்காலிருப்பதாகத் தேவாரமுங் கூறுகின்றது. “உள்ள மிக்கார் பரிமுகத்தின ரொற்றைக்காலர்க-ளெள்ளலில்லா விமையோர்கள்.” எனத் திருக்கேதாரப் பதிகத்து (4) வருதல் காண்க. இவை ‘அணங்கு’ள் அடங்கும். 2, கூற்றம்--இயமன். இறப்போர் இயமனைக் கண்டஞ்சுவதாக நூல்கள் கூறுவது வழக்கு. “அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன்” என்று கூறுதலுங் காண்க. கோண்மா--(இங்கே விதந்து சொல்லப்பட்டனவொழிந்த) கொலைத்தொழிலையுடைய மிருகங்கள். “ஊறுசெய்யுங் கோண்மாக்களை” எனக் கற்பியல் 29-ம் சூத்திரவுரையுள் நச்சினார்க்கினியர் கூறலுங் காண்க. அசுணம்--அசுணப்பறவை. இதனை அசுணமா என்றுங் கூறுப. ஏகபாதம், கூற்றம், கோண்மா என்பன முன்னிருந்து அழிந்துபோன விலங்கின் சாதிகள் என்று கூறுவாருமுளர். அவர் கருத்துப் பொருந்துமாயினுங் கொள்க. 3. தலைப்பெய்தல்--கூடல். ‘தலைப்பெய்துழியல்லது’ எனவும் பாடம். |