1எழுநிலத்தெழுந்த செய்யுளுள்ளும் 2அடி வரையறையுடைய வற்றுக்கே இவ்விலக்கணமென்பதூஉம், திணையே கைகோளெனக் கூறும் உறுப்பு முதலாயினவெல்லாம் 3ஏனை அறுவகைச் செய்யுட்கும் உறுப்பாகாவென்பதூஉம், அவை4யொழிந்த உறுப்பினுள் ஏற்பன பெறுமாயினும் ஆண்டு வரையறையின்மையிற் கூறானென்பதூஉம், அவை செய்தாரெல்லாம் அவற்றானே நல்லிசைப்புலவ ரெனப்படாரென்பதூஉம் பெற்றாம். இனி, நூலும் உரையுஞ் செய்தார் நல்லிசையுடையரென்பது, அவற்றை 5நூலினான் உரையினானென இதற்கு இடையின்றி வைத்தமையிற் பெறுதுமென்பது. வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனர் என்பது, 6இங்ஙனங் கூறிய நல்லாசிரியரிலக்கணமே கூறியொழிந்தார், எல்லாவற்
1. எழுநிலத் தெழுந்த செய்யுளாவன--பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. வாய்மொழி யென்பதற்குக் குறிப்புமொழி என்பது பேராசிரியர் கருத்து. இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் மந்திரம் என்ப. 2. அடிவரையறையுடைய என்றது பாட்டை. 3. ஏனையறுவகைச்செய்யுள் என்றது எழுநிலத்தெழுந்த செய்யுள்களுள் பாட்டொழிந்த உரை முதலிய ஆறையும். 477-ம் சூத்திரம் நோக்குக. 4. ஒழிந்தஉறுப்பு என்றது திணையே கைகோள் முதலியனவொழிந்த மாத்திரை முதலிய உறுப்புக்களை. 5. நூலினான் உரையினான் என்பது ‘நூலினான உரையினான’ என்றிருத்தல் வேண்டும். என்னை? 477-ம் சூத்திரத்தின் தொடக்கமாதலின். இதற்கு--பாட்டிற்கு. இடையின்றி வைத்தல்--அடுத்து வைத்தல். அதனை 476-ம் சூத்திர முடியப் பாட்டிலக்கணமும் அதன்பின் நூலிலக்கணமும் உரையிலக்கணமுங் கூறுதலானுணர்க. 6. ‘இங்ஙனங் கூறிய நல்லாசிரிய ரிலக்கணமே கூறியொழிந்தார் எல்லாவற்றான் எல்லா மமையச் செய்யுஞ் சுவடுடையராகி அவ்வத் துறைபோயினார் தாமுமென்றவாறு’ என்பது, ‘இங்ஙனங் கூறி அந் நல்லாசிரியரிலக்கணமே கூறியொழிந்தாரல்லர் வல்லவாற்றான் எல்லா மமையச் செய்யுஞ் சுவடுடைய ராகி வகுத்துரைத்தார் அவ்வத் துறைபோயினார்தாமும் என்றவாறு’ என்றிருத்தல் வேண்டும். என்னையெனின்? இச் சூத்திரத்துக் கருத்துரையுள் பேராசிரியர் ‘செய்யுட்குறுப்பாமென... அவ்வாறு செய்தல் வன்மையாற் கூறினார்’ என்று கூறுதலானும், நச்சினார்க்கினியரும் விரிவுரையுள் ‘கூறி வல்லிதின் வகுத்துரைத்தனர் என மாறுக’ எனக் கூறுதலானும், பதவுரையுள். ‘இம் முப்பத்துநான்கும் நல்லிசைப்புலவர் செய்யப்படுஞ் செய்யுட் |