பக்கம் எண் :

பொருளதிகாரம்209

றானும் எல்லாமமையச்செய்யுஞ் சுவடுடையராகி அவ்வத்துறை போயினார் தாமும் என்றவாறு; எனவே, இவ்வுறுப்பமையச் செய்தனவே செய்யுளெனப்படுவனவென்று சிறப்பித்தவாறு.

மற்று, ‘கூறி’ எனவும் ‘உரைத்தனர்’ எனவும் இருகாற் சொல்லியதென்னையெனின்,--1அச்செய்யுளானே கூறி அவற்றுப் பொருளுரைத்தாரென்றவாறு; என்றார்க்கு, செய்யுட்குற்றம் ஈண்டோதாரோவெனின், 2ஓதல்வேண்டுமே? இவ்விலக்கணத்துப் பிறழ்ந்துங் குன்றியும் வருவனவெல்லாம் வழுவென்பது அறியவைத்தா3னல்லனே, ஆசிரியனென்பது.


குறுப்பாமெனக்கூறி, அங்ஙன மிலக்கணமே கூறிவிடாதே, அவற்றைத் தாஞ் செய்தல் வன்மையி னமைந்து சுவடுபட வகுத்த அவ்வத் துறையெல்லாம் போயினார்’ என்று கூறுதலானும் என்பது. நச்சினார்க்கினியர் உரைத்த பதவுரையுள்ளும் ‘வகுத்த’ என்பது வகுத்துரைத்தனர் என்றிருத்தல்வேண்டும். என்னையெனின், வகுத்த என்றிருப்பின் இப்பதவுரைக்குப் பயனிலையின்றி முடிதலானும், ‘கூறிவல்லிதின் வகுத்துரைத்தனர்’. என மாறுக என அவரே விரிவுரையுட் கூறலானுமென்க. ஏட்டுப் பிரதி சிலவற்றுள் ‘நல்லாசிரியரிலக்கணமே கூறியொழிந்தாரல்ல ரவற்றானெல்லா மமையச் செய்யும்’ என்று காணப்படலானும், வல்லிதின் என்பதற்கு இவ்விரிவுரையுள் பொருளின்றி முடிதலானும், ‘கூறிவிடாதே’ என்று நச்சினார்க்கினியருரையுட் காணப்படலானும், யாம் மேற்கூறியவாறே பதவுரை இருத்தல் வேண்டுமென ஊகிக்கப்பட்டது. ‘எல்லாவற்றான்’ என்பது தாமோதரம்பிள்ளை பதிப்பிற்பாடம். அது ‘வல்லவாற்றான்’ என்றுமிருக்கலாம். இங்ஙனமன்றிக் கூறியொழிந்தார் என்பதை முற்றாக்கின், ‘வல்லிதின்’ என்பதற்குப் பொருளின்றாம். ஆதலிற் பொருத்தநோக்கிக்கொள்க.

[இவ்வாறு உரைவாக்கியங்களுள் உண்மையறிய முடியாமற் பிறழ்ந்து கிடப்பன பல. அதற்குக் காரணம் ஏடெழுதுவோர், சிதன்முதலியன தின்று இடையிலற்றுக் கிடக்கும் வாக்கியங்களைப் புள்ளிபோடாமற் பின்சேர்த்தெழுதியதும் தாமுஞ் சில சேர்த்து எழுதியதும் மாறிஎழுதியதுமேயாம்.]

1. அச்செய்யுளானே கூறி அவற்றுப் பொருளுரைத்தார் என்றது நல்லிசைப்புலவர் செய்த செய்யுளானே அதற்குரிய உறுப்புக்கள் கூறி, அவ்வுறுப்புக்களின் பொருளும் கூறினார் என்றபடி. பொருள் என்றது ஈண்டு இலக்கணத்தை.

2. ஓதல்வேண்டுமே--ஓதல்வேண்டாம்; ஏ எதிர்மறை.

3. அல்லனே--என்பதில் ஏகாரம் எதிர்மறை. வைத்தானாம் என்று பொருளாம். அல்லனே என்பது அல்லனேல் என்று பாடமிருந்திருத்தல்வேண்டும். இப்பாடமுடிபிற்கு ஓதல்வேண்டுமே என்பதில் ஏகாரம் தேற்றப்பொருளில் வந்ததாகும்.