மற்றுச் செய்யுளுறுப்பு ஈண்டோதினார்; செய்யுள் யாண்டோதுபவெனின், அறியாது கடாயினாய்,--உறுப்பென்பன உறுப்புடைப் பொருளின் வேறெனப்படா; பொருள் எனப்படுவன உறுப்பே, அவற்றது ஈட்டத்தினை முதலென வழங்குபவாகலான் உறுப்பினையே சொல்லியொழிந்தார்; முதற்பொருளதிலக்கணமென, உறுப்பிலக்கணத்தினையே வேறுபடுத்துக் 1கூறலாவதின்மையானும், உறுப்புரைப்பவே 2அவ்வுறுப்புடைய பொருள் வழக்கியலாற் பெறலாமாகலானுமென்பது. மற்று, யாத்த சீரேயடியாப்பென்றதென்னை? தளையென்பதோர் உறுப்புப் 3பிறர் வேண்டுபவாலெனின்,--4இவருஞ் சீரது தொழிலே தளையென வேண்டுப; தளைத்தலிற் றளையாதலானும் வேறு 5பொருளென வேண்டாரென்பது; 6என்றார்க்கு, அசையின்றிச் சீருமில்லை; சீரின்றி அடியுமில்லையாம் பிறவெனின், அற்றன்று; உறுப்பும் உறுப்புடைச் செய்யுளும்போல 7அவை கொள்ளப்படும்; தளையென வேறொன்றின்மையிற் கொள்
1. கூறலாவதின்மையானும் -- கூறும்வழக்கு இல்லாமையானும். 2. உறுப்புடைப்பொருள் -- செய்யுள். 3. தளைவேண்டுவார் சிறுகாக்கைபாடினியார் முதலிய ஒருசாராசிரியர். 4. இவர் -- தொல்காப்பியர். தளையாதலானும் என்றதன் உண்மையை நோக்குமிடத்து வேறும் எண்ணப்பட்ட வாக்கியமிருந்து சிதைவுற்றதுபோலத் தெரிகின்றது. 5. பொருள் -- உறுப்பு. 6. என்றார்க்கு என்றது -- சீரதுதொழிலே தளையாதலின் தளையென ஓருறுப்பில்லை என்றார்க்கு என்றபடி. சீரியைந்தமையைத் தளைஎன வேண்டாது தளையில்லையெனின்? அசையியைந்ததே சீராதலின் சீர்என ஓருறுப்பும் வேண்டியதில்லையாகும்; சீரியைந்ததே அடியாதலின் அடியென ஓருறுப்பும் வேண்டிய தில்லையாகும் பிறவெனின்? என்க. 7. அவை--சீரும் அடியும். சீரைப்பிரித்து அசைகொள்ளப்படும். ஆதலால் அசை இயைந்ததைச் சீரென வேண்டினார். அடியைப்பிரித்துச் சீர்கொள்ளப்படும். ஆதலிற் சீரியைந்ததை அடியெனவேண்டினார்; உறுப்பியைந்ததை உறுப்புடைச் செய்யுளென வேறுவேண்டினாற்போல என்பது. அசையியைந்து சீரென வேறொன்று காணப்பட்டாற்போலவும் சீரியைந்து அடியென வேறொன்று காணப்பட்டாற்போலவும், சீரியைந்து தளையென வேறோருறுப்புக் காணப்படாமையின் தளையென வேறொன்று இவர் வேண்டாராயினார் என்றபடி. சீர் |