ளான்; என்னை? அது குறளடியென வேறுறுப்பாயினமையினென்பது; தளையென்று இதனைக் கோடுமேல் அதனைக் குறளடியெனலாகாதென்பது; அல்லதூஉம், ஈரசை கூடி ஒரு சீராயினவாறுபோல இருசீர் கூடியவழி அவ்விரண்டனையும் ஒன்றென்று கோடல்வேண்டும்; கொள்ளவே, 1நாற்சீரடியினை இடை துணித்துச் சொல்லுவதன்றி, நான்கு பகுதியானெய்திக் 2கண்டம்படச் சொல்லுமாறில்லையென்க. ‘யாத்தசீர்’ என்றதனானே அசைதொறுந் துணித்துச் சொல்லப்படா சீரென்பதூஉம், அச்சீரான் அடியானவழிச் ‘சீரியைந்திற்றது சீரெனவே’ படுமென்றதனாற் சீரெல்லாந் துணித்துச் சொல்லப்படுமென்பதூஉங் கூறினான் இவ்வாசிரியனென்பது; அற்றன்றியும், அவ்வாறு தளைகொள்வார் சீரானடிவகுப்பதூஉங் குற்றமென மறுக்க மற்றுத் தொடை கூறியதென்னை? அடியிரண்டு தொடுத்தற்றொழிலல்லது இன்மையினெனின், அற்றன்று; தொடுத்தற்றொழின் மாத்திரையானே தொடையென்றானல்லன்; அவ்வடிக்கண் நின்ற எழுத்துஞ் சொல்லும் 3பிற பொருளாகலான் அவற்றானே தொடை கொண்டமையின் வேறுறுப்பென்றானென்பது. அஃதேல், சீருஞ்சீரும் இயைந்தவழி அவையிடமாக நின்ற அசையால் தளைகொள்ளாமோவெனின்,--கோடுமன்றே; அதனை அடியென்னாமாயினென முற்கூறியவாறே கூறி மறுக்க; அல்லதூஉம், அவ்விரண்டசையுங் 4கூடிச் சீராமன்றோவெனினென்பது. மற்று நாற்சீரடியுள் இருசீரியைந்தவழிக் குறளடியென்னா
கூடிய உறுப்பைத் தளையென்று கொண்டால் அதனை அடியெனலாகாது என்றபடி. 1. நாற்சீரடியினை இடைதுணித்துச் சொல்லுவதன்றி என்றது, முதலிருசீரியைந்து ஒருதளையாயும், மூன்றாஞ் சீரும் நாலாஞ்சீரு மியைந்து ஒருதளையாயுங் கொள்ளப்படுங்கால், அவ்விரு தளைக்கும் (முதலிரு சீருக்கும் பின்னிரு சீருக்கும்) இடையே துணித்துச் சொல்வதன்றி என்றபடி. நான்கு பகுதியானெய்திக் கண்டம்படச் சொல்லுமாறில்லை எனவே நான்கு சீராகத் துணித்துச் சொல்லுமாறில்லை என்பது கருத்தாகும். 2. கண்டம்--துண்டு. 3. பிறபொருள்--அவ்வடியைவிட வேறானபொருள். அவற்றான்--எழுத்தானுஞ் சொல்லானும் எதுகை மோனை முதலியன எழுத்துத்தொடை. முரண்முதலியன சொற்றொடை. 4. கூடிற் சீராமன்றோ என்பதும் பாடம். அதுவே பொருத்தம். |