பக்கம் எண் :

பொருளதிகாரம்21

“உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி
 யிறப்ப நிழற்பயந் தாஅங்கு.”

(நால-38)

என்பது, 1பிறபொரு ளாக்கம்பற்றிய வியப்பு.

இனி, மதிமை சாலா மருட்கையானே சிறுமைப்பொருள் பெருந்தொழில் செய்தலும், பெருமைப்பொருள் சிறுதொழில் செய்தலும் வியப்பாமெனக் கொள்க.

2”கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டு.”

(புறம்-77)

என்னும் பாட்டுச் சிறியோர் பெருந்தொழிலைச் செய்தது.

“அன்னா னொருவன்றன் னாண்டகைவிட் 3டென்னைச்
 சொல்லுஞ்சொற் கேட்டீ சுடரிழாய்.”

(கலி-47)

என்பது, பெரியோன் சிறுதொழில் கூறலின் வியப்பாயிற்று.

புதுமையை ஆக்கத்துளடக்கி முதுமையென்பது பாடமாகவும் உரைப்ப; அன்னதோர் வழக்கின்மையானும் புதுமை 4ஒன்று ஒன்றாய்த் திரியுமெனப்பட்டு அவ்வாக்கத்துள் அடங்காமையானும் அஃதமையாதென்பது.

இங்ஙனம் இவை நான்கு சூத்திரப்பொருளும், நானான்கு பதினாறாகியும் முப்பத்திரண்டாகியும் விரியுமாகலின் இவற்றை ஓரினமாக்கி முதற் சூத்திரத்து முன் வைத்தானென்பது.

இனிவருஞ் சூத்திரநான்கினும் எண்ணப்படும் பொருள் ஒன்று இரண்டாகாமையின் அவை பதினாறேயாமென்பது; அஃதேயெனின், இத்துணையுங் கூறிவந்த முப்பத்திரண்டனையும் இனிக் கூறும் பதினாறனையும் நோக்கி முதற் சூத்திரத்துள்,


யைக் கண்டபொழுதே சாபம்நீங்கித் தமக்கியல்பான உடம்பைப் பெற்று ஆக்கம் அடைந்தமையை (புறம்-5).

1. சிறிய வித்துப் பெரிய மரமானது ஆக்கம்.

2. கிண்கிணி களைந்தகால் என்றமையின் குழவிப் பருவமுடையான் என்பதூஉம் அவன் போர்செய்யக் காலில் கழல் கட்டி என்றமையின் அவன் பெருந்தொழில்செய்ய முயன்றமையும் பெறப்பட்டன.

3. என்னைச் சொல்லுஞ் சொல் என்பது பின்னின்றிரத்தலைக் குறித்தலின் சிறுதொழிலாயிற்று.

4. ஆக்கம் ஒன்று ஒன்றாய்த் திரிவது; புதுமை அவ்வாறு திரியாதாகலின் அதனுள் அடங்காது என்றபடி.