“பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப.” (பொ-249) என்றானென்னாமோவெனின், என்னாமன்றே. பதினாறு பொருளும் மேற்கூறிய முப்பத்திரண்டு 1மென்று படாமையி னென்பது; என்றார்க்குத் தன்கட்டோன்றுதல் பிறன்கட்டோன்றுதலெனப் பகுத்துப் பொருளுரையாது 2மேலனவும் இனி வருகின்றனவும் நானான்கேயாகலாற் ‘பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருள்’ (249) என்றானாமெனின், அங்ஙனங் கூறின் அவை ‘கண்ணிய புறனே நானான் கென்ப’ (பொ-249) என்றும், ‘நாலிரண் டாகும் பாலுமா ருண்டே’ (250) என்று மடங்கக் கூறல் வேண்டாவாம்; வேண்டவே, இச்சூத்திரம் எட்டு வகையாகியே செல்லுமென மறுக்க; அல்லதூஉம் இஃது உலக வழக்காதலிற் பண்ணைத்தோன்றிய பொருள் ஈண்டு ஆராயானென்பது. அன்றியும் இவற்றைப் பண்ணைத்தோன்றிய பொருளெனின் 3ஒன் றொன்றாக்கிக் கூறாது, கூத்தன் அரங்கினுள் இயற்றும் வகையானே சுவையுங் குறிப்புஞ் சத்துவமுமென வேறு வேறு செய்வான் ஆசிரியனென்பது. (7) [அச்சச்சுவை இத்துணையது எனல்] 256. | அணங்கே விலங்கே கள்வர்த மிறையெனப் பிணங்கல் சாலா வச்ச நான்கே. |
இது, முறையானே அச்சமுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : தெய்வமும் விலங்கும் கள்வரும் தமக்கு இறைவ ராயினாருமென நான்கு பகுதியான் அச்சம் பிறக்கும் என்றவாறு.
1. என்று படாமையின்-என்று சூத்திரப்பொருள் படாமையின். 2. மேலனவற்றையும் இனி வருவனவற்றையும் (8x4=32) முப்பத்திரண்டா மென்றானெனின். முப்பத்திரண்டு பதினாறா மென்றும். பதினாறெட்டாமென்றும். ஒன்று ஒன்றுளடங்கக் கூறவேண்டாவாம் என்றபடி. அடங்கக்கூறல் வேண்டினமை யானே இச்சூத்திரம் நான்குவகையாகாது எட்டுவகையாம் என்றபடி. எனவே இதன் முதற் சூத்திரங்களும் எவ்வெட்டுவகையாம் என்றபடி. ஆகவே இந்நான்கு சூத்திரத்தானாய முப்பத்திரண்டும் வேறு. பண்ணைத் தோன்றிய முப்பத்திரண்டும் வேறு என்றபடி. 3. ஒன்றொன்றாக்கி--ஒன்றை யொன்று ளடக்கி. ஆக்கி--அடக்கி. அடக்கி என்று பாடமிருப்பினு மமையும். |