பக்கம் எண் :

பொருளதிகாரம்213

எனக் கூறி, வடவேங்கடந் தென்குமரியெனப் பனம்பாரனார் கூறியவாற்றானே எல்லைகொண்டார் காக்கைபாடினியார்; ஒழிந்த காக்கைபாடினியத்து,

“வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்
 தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்.”

(151)

எனத் தென்றிசையுங் கடலெல்லையாகக் கூறப்பட்டதாகலான் அவர் குமரியாறுள்ள காலத்தாரல்லரென்பதூஉம், 1குறும்பனை நாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவதன்றென்பதூஉம் பெற்றாம். பெறவே, 1அவர் இவரோடு ஒரு சாலை மாணாக்கரல்லரென்பது எல்லார்க்கும் உணரல் வேண்டுமென்பது.

மற்றிது முறையாயவா றென்னியெனின்,--மாத்திரை எழுத்தினது குணமாதலானும், அசையுஞ் சீரும் அடியம் தூக்கும் பாவும் வண்ணங்களுமென்ற இன்னோரன்னவெல்லாம் மாத்திரைநிமித்தமாகத் தோன்றுவனவாதலானும், அது முன் (314) வைத்தான். அக்குணத்திற்குரிய எழுத்தினை அதன்பின் வைத்தான். அவ்வெழுத்தான் அசையும், (315) அசையாற் சீரும், (324) சீரான் அடியும், (346) அவ்வடி பெற்றவழி அதனை ஆக்குமாறறியக்கூறும் யாப்பும் (390) அவ்வடியகத்தன சொல்லும் பொருளுமாகலான் அதன்பின் மரபும் வைத்தான். அவ்வடியிரண்டினைத் தொடுக்குங்கால் அவற்றை ஓரடியென ஒரு தொடர்ப்படாமைத் துணிப்பது தூக்காகலான் (399) அதனைத் தொடைக்குமுன் (400) வைத்தான். அவ்வடியிரண்டு தொடுத்தவழியுங் கொள்ளப்படும் நோக்கென்பதறிவித்தற்கு (419) அதனைத் தொடைப்பின் வைத்தான். அவ்வடி இரண்டும் பலவுந் தொடர்ந்தவழி முழுவதுங் கிடப்பது பாவாகலான் அதனை அதன்பின் (417) வைத்தான். அப்பாத் 3துணிந்த4துணிவினை (501) 5 எண்ணுதலான் அளவினை (496) அதன் பின் வைத்தான். திணையுந் திணைக்குறுப்பாகிய (497) ஒழுக


1. குறும்பனைநாடு - கடல்கோட்குமுன் தென்றிசைக்கண் இருந்ததொருநாடு.

2. அவர் என்றது பிற்காலத்திருந்த காக்கைபாடினியாரை.

3. துணிந்த - வரையறுத்த.

4. துணிவு - வரையறை. துணியினை என்றிருப்பது நலம். துணி-துண்டு-அடி.

5. எண்ணுதல் - அளவு செய்தல்.