லாறும் அவ்வொழுக்கத்தவாகிய கூற்றும் (506) அதன்பின் வைத்தான். கேட்போருங் (508) கேட்கும் (513) இடனும் (510) அதுபோலப் புலப்படாத காலமும் (514) இவற்றாற் பயனும் (515) பயனது 1பரத்துவரும் மெய்ப்பாடும் (516) இவற்றினெல்லாம் ஒழிந்துநின்ற எச்சமும் (518) அவ்வெச்சத்தோடுங் கூட்டியுணரப்படும் முன்னமும் (519) அம்முறைமையான் அதன்பின் வைத்தான். அவற்றிற்கெல்லாம் பொதுவாகிய பொருளை (520) அதன்பின் வைத்தான். அப்பொருட் பிறழ்ச்சியை ஒருப்படுக்குந் துறையை அதன்பின் (521) வைத்தான். மேல் (523) எச்சமும் மாட்டுமின்றியும் வருமென்பவாகலான் மாட்டினைத் துறைவகையின்பின் வைத்தான். அவற்றுள் எச்சத்தினை முன் ஓதினான் அது செய்யுட்க2ணின்றி வருஞ் சிறுபான்மையாதலானென்பது. வண்ணம் பாவினது பகுதியுறுப்பாதலான் அதனை அவற்றுப்பின் (524) வைத்தான். வனப்பினை (525) எல்லாவற்றுக்கும்பின் (547) வைத்தான். அவற்றை ஒன்றொன்றாக நோக்குங்கால் அவ்வெட்டுமின்றியுஞ் செய்யுள் செய்பவாகலினென்பது. மற்றிவ்வுறுப்பினையெல்லாம் ஆசிரியன் 3குறியென்றுமோ உலகு குறியென்றுமோவெனின், அவ்விரு திறத்தானும் ஏற்பனவறிந்து கொள்ளப்படுமென்றொழிக. இவற்றை4உயிருடையத னுறுப்புப்போலக் கொளின் உயிர் வேறு கூறல்வேண்டுவதாம், அவ்வாறு கூறாமையிற் கலவை யுறுப்புப்போலக் கொள்க. (1) [மாத்திரையளவும் எழுத்தியல்வகையும் உணர்த்துதல்] 314. | அவற்றுண், மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர். |
1. பரம்--மேல். பயனது பாத்துய்ப்ப வரும் என்றும் பாடம். ஆயின் திருக்கோவையாருரையுள்ளும், பயனென்பது நெஞ்சினடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன்வயினிகழ்ந்த சொல்லானெய்துவது என்று வருதலின் முன்னையதே பொருத்தம்போலும். 2. இன்றி-இல்லாமல், வருவிப்பது என்றபடி. 3. குறி-பெயர். 4. உயிருடையது-உயிருடைப் பொருள.் உயிர் வேறு கூறாமையின் உயிரில்லாததோர் கலவையுறுப்புப் போலக் கொள்க என்றபடி. உயிர் என்றது செய்யுளைக் குறிப்பால் உணர்த்தி நின்றது. |