இது, நிறுத்தமுறையானே முதற்கணின்ற மாத்திரையும் எழுத்தியலு முணர்த்துதல் நுதலிற்று. இ--ள்: மாத்திரைகள் பல தொடர்ந்து செய்யுட்கண்விராய் நிற்கும் அளவையும், எழுத்துக்களியற்றப்பட்டு எழுத்ததிகாரத்தின்வேறுபட்ட தொகையுமென இரண்டினமும் மேல் எழுத்தோத்தினுட் கூறப்படாதனவல்ல, அவையே: அவற்றை ஈண்டு வேண்டுமாற்றாற் கொள்க என்பான் மேற்கிளந்தவகையிற் பிறழாமற் கொள்க என்றானென்பது. 1அன்ன எனவே,2இம்மாத்திரையளவும் எழுத்தியல் வகையும் வேறென்பதூஉம், வேறாயினும் ஆண்டுக் கூறியவற்றொடு வேறுபடாமைக் கொள்கவென்பதூஉம் உரைத்தானாம்; எனவே, எல்லாவழியும்3வரையாது எய்தற்பாலவாகிய மாத்திரைகள், ஒரோவழி வரையப்படுமாயினும் அவை முற்கூறாத வேறுசில மாத்திரையுமல்ல; ஈண்டுப் பதினைந்து எழுத்தென்று கூறிப் 4பயங்கோடுமாயினும் ஆண்டை முப்பத்துமூன்றெழுத்தின் வேறுபடப் பிறந்தன சிலவெழுத்து மல்லவென்பான் மேற்கிளந்தன்ன என்றானென்பது. மாத்திரையென்றொழியாது மாத்திரையளவும் என்றதனான் அம்மாத்திரையை விராய்ச்செய்யும் அளவை ஈண்டுக் கூறினானென்பது கருத்து. மற்று, எழுத்தியல் வகையினைமாட்டேற்றான் முப்பத்து மூன்றெனக் கொள்வதன்றிப் பதினைந்தென்று கொள்ளுமாறென்னையெனின் எழுத்தோத்தினுட் குறிலு நெடிலும் உயிரு மெய்யும்5இனமூன்றுஞ் சார்பெழுத்து மூன்றுமெனப் பத்தும் இயல்புவகையான் 6ஆண்டுப் படுத்தோதினான்; உயிர் மெய்யும் உயிரளபெடையுந் தத்தம் வகையாற் கூடுமாறும் ஐகாரம் ஒளகாரம் போலிவகையாற் கூடுமாறும் யாழ்நூலகத்து
1. அன்ன என ஒப்புக் கூறியதனானே. 2. இம்மாத்திரையளவு என்றது இச்செய்யுளியலிற் கூறும் மாத்திரையளவு என்றபடி. 3. வரையாது--நீக்கப்படாது 4. பயம்--பயன். 5. இனமூன்று - வல்லினம், மெல்லினம், இடையினம். 6. ஆண்டு என்றது எழுத்ததிகாரத்தை. |