ஒற்றிசை நீளுமாறும் ஆண்டுத் 1தோற்றுவாய் செய்தான். செய்யவே அவை ஈண்டுக் கூறும் எழுத்தியல் வகையோ டொக்குமென்று உய்த்துணர்ந்துகொள்ள வைத்தானென்பது. இவற்றோடு மகரக்குறுக்கமும் கூட்டிப் பதினாறெழுத்து என்பாருமுளர். அதனாற் பயனென்னையெனின் பாட்டுடைத் தலைவன் கேட்டுக்குக் காரணமாமென்பர்; மற்2றுயிர்மெய்த் தொடக்கத்து ஐந்தனையும் மேல் எழுத்தென்றிலனாகலான் ஈண்டு எழுத்தியல்வகையுள் எழுத்தாக்கி அடக்குமாறென்னையெனின்? ஈண்டு அன்னவெனவே, ஆண்டு 3இரண்டெழுத்தின் கூட்டமெனவும் 4மொழியெனவும்5போலியெனவுங் கூறினானாயினும் அவற்றை 6எழுத்தியல்வகையெனப் பெயர் கொடுப்பவே 7ஆண்டு நின்ற வகையானே ஈண்டு எழுத்தெனப்படுமென்பதாயிற்று. இதன் கருத்து: இயலென்றதனான் இயற்றிக்கொள்ளும் வகையான் எழுத்து இனையதென்றானாம். வகையென்பதனான் முப்பத்துமூன்றினைக் குறிலும் நெடிலுமென்றற் றொடக்கத்துப் பெயர் வேறுபாட்டாற் பத்துவகைப்பட இயற்றுதலுங் 8கூட்ட வகையானிரண்டும், 9போலிவகையானிரண்டும், 10யாழ்நூல் வேண்டும்வகையா னொன்றுமென ஐந்துவகையானியற்றுதலுமென இருவகையுங் கொள்ளப்படும்; அல்லதூஉம், செய்யுட்கள் அவ்வெழுத்துவகையான் இன்னோசையவாக விராய்ச்
1. தோற்றுவாய் செய்தல்--தோன்றுதற் கிடஞ்செய்தல், தொடக்கஞ் செய்தல். 2. உயிர்மெய்த் தொடக்கத்து ஐந்து, உயிர்மெய், உயிரளபெடை, ஐகார ஒளகாரப் போலி, ஒற்றளபெடை, ஆண்டு--எழுத்ததிகாரத்தினுள். 3. இரண்டெழுத்தின் கூட்டம் என்றது, உயிர்மெய்யை. 4. மொழி என்றது அளபெடையை. 5. போலி என்றது ஐகார ஒளகாரப் போலியை. 6. எழுத்தியல்வகையெனப் பெயர் கொடுத்தது. இச்சூத்திரத்துள் (2) என்க. 7. ஆண்டு நின்றவகையென்றது எழுத்தன்றி எழுத்தின் வகையாய் நின்றமையை. 8. கூட்டவகையானிரண்டு என்றது--உயிர்மெய்யையும், உயிரளபெடையையும். 9. போலிவகையானிரண்டு ஐ, ஒள 10. யாழ்நூல்--இசை நூல். ஒன்று--ஒற்றளபெடை. |