செய்தலுங் கொள்க. மற்றளபெடையை மேல் மொழியென்றான் ஈண்டெழுத்தென்றானாகலின், இதனை 1ஓரெழுத்தென்று கோடுமோ இரண்டெழுத்தென்று கோடுமோ எனின், ‘நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே.” (தொ. எழு. 41) என்று கூறியவாற்றான், ஆண்டு இரண்டெழுத்தெனக் கொள்ளக் கிடந்ததாயினும் 2முன்னர்ப் போக்கி, “அளபெடை யசைநிலை யாகலு முரித்தே.” (329) என்றவழி, எழுத்து நிலைமையும் எய்துவிக்குமாகலான் எதிரது நோக்கி ஈண்டு ஓரெழுத்தென்று கோடுமென்பது. இனி அவற்றுட் குறிலும் நெடிலும் குற்றுகரமும் அசைக்குறுப்பாம்; மற்று, “ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி.” (315) என்பதனான் ஒற்றும் அசைக்குறுப்பாகாவோவெனின்,--3அச் சூத்திரத்தானன்றே 4அவை குறிலும் நெடிலும் அடுத்து வந்தும் வேறுபடாது 5நேர்நிரையாத லெய்தியது நோக்கி அவை அசைக்குறுப்பாகாவென்றதென்க. மற்று இடைநின்று நிரையாதலை விலக்காவோவெனின்,--6அன்னதோர் விதியுண்டாயினன்றே இவை இடைபுகுந்து விலக்கவேண்டுவதென மறுக்க. நெடிலும் அளபெடையிரண்டும் உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் ஐகாரக் குறுக்கமும் ஒளகாரக் குறுக்கமுமெனப் பத்துந் தொடைக்கு உறுப்பாம். குறிலும் நெடிலும் அளபெடையிரண்டும் இனம் மூன்றும் ஆய்தமும் வண்ணத்திற்கு உறுப்பாம். இங்ஙனமே வேறுபடவந்த பயனோக்கி எழுத்தினை இயற்றிக் கோடலின் ‘எழுத்தியல் வகை’ என்றானென்பது; அஃதேல், ஒற்றுங் குற்றிகரமும்
1. ஓரெழுத்தென்றும் ஓரிரண்டடெழுத்தென்றுங் கோடுமோ வெனின் என்பது தாமோதரம்பிள்ளை பதிப்பு. 2. முன்னர்--பின். 3. அச்சூத்திரம்--ஒற்றொடு வருதலென்ற சூத்திரம். அச்சூத்திரத்தானன்றே எய்தியது நோக்கி ஆகாவென்றதென்க. 4. அவை--மெய். 5. நேர் நிரை--நேரும் நிரையும் 6. அன்னதோர் விதி--ஒற்றிடை நிற்குமென்ற விதி. |