கால்வண்ண மல்லாற் கடுமான்றேர்க் கோதையை மேல்வண்ணங் கண்டறியா வேந்து.” (இ-வி-ப-124) இஃது, 1இறைபொருளாக அச்சம் பிறந்தது. பிணங்காத அச்சமென்னாது ‘சாலா அச்சம்’ என்ற மிகையான் இந் நான்குமேயன்றி ஊடன் முதலியனவும் அச்சத்திற்குப் பொருளாமென்று கொள்க. “சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின் 2னாணை கடக்கிற்பா ரியார். (கலி-81) என்பது, புலவி பொருளாக அச்சம் பிறந்தது. “அணிகிளர் சாத்தி னம்பட் டிமைப்பக் கொடுங்குழை மகளிரி 3னொடுங்கிய விருக்கை.” (அகம்-236) “அச்சா றாக வுணரிய வருபவன் 4பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல்.” (கலி-75) என வருவனவும் அவை. பிறவும் அன்ன. (8) [பெருமிதச்சுவை இத்துணையது எனல்] 257. | கல்வி தறுகண் ணிசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமித நான்கே. |
இஃது, ஆறாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வீரம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : கல்வியும் 5தறுகண்மையும் புகழும் கொடையு மென்னும் நான்கும்பற்றி வீரம் பிறக்கும் என்றவாறு. இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமிதமென்றெண்ணினான்; என்னை? எல்லாரொடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதமெனப்படும் என்றற்கென்பது.
1. இறை--அரசன். 2. ஆணை கடக்கிற்பார் யார் என்றமையின் அச்சமாயிற்று. புலவி--ஊடல். 3. ஒடுங்கிய இருக்கை என்றது, ஊடற்கஞ்சி மகளிர்போல் அவன் ஒடுங்கியிருக்கின்ற இருக்கை. 4. பொய்ச்சூள்--பொய்ச் சத்தியம். 5. தறுகண்மை--அஞ்சாமை. |