என்றாற்போலச் சினமில்லதனை உள்ளதுபோலக் கூறுவனவுங் கொள்ளாமோவெனின், உணர்வுடையனவற்றுக் கல்லது சுவை தோன்றாமையின் வெகுளியென்று ஈண்டுக் கூறப்படாவென்பது. 1இது பிறன்கட் டோன்றிய பொருள்பற்றி வரும். (10) [உவகைச்சுவை இத்துணையது எனல்] 259. | செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்ல னீத்த வுவகை நான்கே. |
இஃது, ஈற்றுக்கண்ணின்ற 2உவகை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : செல்வமென்பது, நுகர்ச்சி; புலனென்பது, கல்விப் பயனாகிய அறிவுடைமை; புணர்வென்பது, காமப்புணர்ச்சி முதலாயின; விளையாட்டென்பது, ‘யாறுங் குளனுங் காவுமாடிப் பதியிகந்து வருதன்’ (191). முதலாயின. இவை நான்கும் பொருளாக உவகைச்சுவை தோன்றும் என்றவாறு. உவகையெனினும் மகிழ்ச்சியெனினும் ஒக்கும். “உரனுடை யுள்ளத்தை செய்பொருண் முற்றிய வளமையா னாகும் பொருளிது வென்பாய்.” (கலி-12) என்புழி, வளமையா னாகும், மனமகிழ்ச்சி இதுவெனக் கூறினமையின், இது செல்வம் பொருளாகப் பிறந்த உவகையாம். “நன்கலம் பெற்ற வுவகையர்.” என்பதும் அது. “பெண்டிர் நலம்வௌவித் தண்சாரற் 2றாதுண்ணும் வண்டிற் றுறப்பான் மலை..” (கலி-40) என்பது, அறிவு பொருளாக உவகை பிறந்தது; என்னை? ‘முகைப்பதம் பார்க்கும் வண்டுபோலத் தலைவியரை நகைப்பதம் பார்க்கும் அறிவுடைமை’காமத்திற்கு ஏதுவாமாகலின்.
1. இது--வெகுளி. 2. உவகைப் பொருள்களை “ஒத்தகாமத்தொருவனும்......ஏக்கழுத்தம்மே” என்னுஞ் செயிற்றியனார் சூத்திரம் நோக்கி யறிக.. (இளம்பூரணருரை). 3. தாதுண்ணும் வண்டினென்றமையான் நகைப்பதம் பார்த்தல் பெறப்பட்டது. நகைப்பதம்--தன்னொடு நகும் பருவம். |