1”இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ நகலி னினிதாயிற் காண்பாம்--அகல்வானத் தும்ப ருறைவார் பதி.” (நால-137) என்பதும் அது. “இலமல ரன்ன வஞ்செந் நாவின்.” (அகம்-142) என்னும் மணிமிடை பவளத்துள், “தொடிக்கண் வடுக்கொள முயங்கினள் வடிப்புறு நரம்பிற் றீவிய மொழிந்தே.” என்பது, புணர்ச்சிபற்றிய உவகை; என்னை? அவள் இவ்வாறு முயங்கினமையான். “உவவினி வாழியென் னெஞ்சே.” என்றமையின், “துயிலின்றி யானீந்தத் தொழுநையம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான்மன்னோ.” (கலி-30) என்புழி, ‘ஆறாடி விளையாடி மயிலியலார் மருவுண்டு மறைந் தமைகுவான்மன்’ என்றமையின் இது விளையாட்டுப் பொருளாக உவகை பிறந்தது. ‘அல்லல் நீத்த வுவகை’ என்றதனாற் பிறர் துன்பங் கண்டு வரும் உவகையும் உவகையெனப்படாதென்பது. இதுவுந் தன்கட்டோன்றிய பொருள்பற்றி வரும் என்றார்க்குப் பிறன்கட்டோன்றிய இன்பம் பற்றியும் உவகை பிறக்குமன்றே! அஃதெப்பாற்படுமெனின், அதுவும் ‘அல்லல் நீத்த வுவகை’ என்றதனான் உவகையெனப்படும். இனித் தன்கட்டோன்றிய பெருமிதமும் உவகையும் முற்கூறாது, பிறன்கட்டோன்றிய அச்சம் முற்கூறி, இதனை ஈற்றுக்கண் வைத்தமையான் 2எடுத்தோதிய நான்கும்போலாது இது பிறன்கட்டோன்றிய இன்பம் 3பொருளாக வருமென்பது கொள்க. (11)
1. கல்வியாளர் தம்முட் கூடி மகிழ்தல் அறிவுடைமைபற்றி வந்த உவகை. 2. எடுத்தோதிய நான்கு--இச் சூத்திரத்தா லெடுத்தோதிய நான்கு. இது--இவ்வுவகை. 3. பொருளாகவும் வருமென்றிருப்பது நலம். போலாது என்றது; அவை நான்குந் தன்கட்டோன்றிய பொருள்பற்றி வருவன. |