பக்கம் எண் :

30மெய்ப்பாட்டியல்

[மேற்கூறியவன்றி இவையு மெய்ப்பாடு முப்பத்திரண்டு
உள எனல்]

260. ஆங்கவை யொருபா லாக வொருபா
லுடைமை யின்புற னடுவுநிலை யருள
றன்மை யடக்கம் வரைத லன்பெனாஅக்
கைம்மிக னலிதல் சூழ்ச்சி வாழ்த்த
னாணுத றுஞ்ச லரற்றுக் கனவெனாஅ
முனித னினைதல் வெரூஉதன் மடிமை
கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக்
கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை
வியர்த்த லைய மிகைநடுக் கெனாஅ
விவையு முளவே யவையலங் கடையே.

இச்சூத்திரம் முற்கூறிவந்த எண்ணான்குமன்றி இவை முப்பத்திரண்டு அவைபோல மெய்ப்பாடெனப்படுமென்ப துணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : ஆங்கவை ஒருபாலாக--எள்ளன் (252) முதலாக விளையாட் (259) டிறுதியாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் ஒரு கூறாக; ஒருபாலென்பது, இனிச் சொல்லுகின்ற ஒரு கூறென்றவாறு; பின்னர் அவற்றையெல்லாம் எண்ணி, ‘இவையு முளவே யவையலங் கடையே’ (260) என்றான். ஈண் டெண்ணப்பட்டவையே ஆண்டு அடங்குவனவும் உள. அப்பொருண்மைய வல்லாதவிடத்து, இவை முப்பத்திரண்டும் ஈண்டு மெய்ப்பாடெனப்படும் என்றவாறு.

இவை முப்பத்திரண்டெனத் தொகை கூறியதிலனாலெனின், ‘ஆங்கவை யொருபாலாக வொருபால்’ என்றானாகலின் இரு கூறெனப்படுவன 1தம்மினொத்த எண்ணாதல் வேண்டுமாகலின், அவை முப்பத்திரண்டெனவே இவையும் முப்பத்திரண்டு என்பது 2எண்ணி உணரவைத்தானென்பது.

உடைமையென்பது, செல்வம்; செல்வ நுகர்ச்சியாயின் உவகைப்பொருளாம்; இஃது அன்னதன்றி நுகராதே அச்செல்வந்


1. தம்மின் - தம்முள்; ஒன்றோடொன்று.

2. எண்ணியுணர--எண்ணுமுறையாக எண்ணியுணர.