1இருவகை நிலமெனப்படுமென, சுவைப்பொருளுஞ் சுவைத் தோனுமென இருநிலத்தும் நிகழுமென்பதே பொருளாதல் வேண்டுமென்பது. குறிப்பென்பது, கைப்பின் சுவையுணர்வு பிறந்தவழி வெறுப்பு முதலாயின உள்ளநிகழ்ச்சிபோல, அஞ்சுதக்கன கண்டவழி அதனை நோக்காது வெறுக்கும் உள்ளநிகழ்ச்சி. விறலென்பன, அவ்வுள்ளநிகழ்ச்சி பிறந்தவழி வேம்பு தின்றார்க்குத் தலை நடுங்குவதுபோலத் தாமே தோன்றும் நடுக்க முதலாயின. இவ்வகையால் இந்நான்கினையும் எட்டோடும் உறழவே முப்பத்திரண்டாயின. இனி, அவை பதினாறாயினவாறென்னையெனின்,--வேம்பு முதலாயின பொருளும் அதனோடு நா முதலாயின பொறியும் வேறு வேறு நின்றவழிச் சுவை பிறவாமையானும் அவ்விரண்டுங் கூடியவழிச் சுவை பிறத்தலானும் 2அவை பதினாறும் எட்டெனப்படும்; இனிக் குறிப்புஞ் சத்துவமென்பனவும், உள்ளநிகழ்ச்சியும் உடம்பின் வேறுபாடுமென்பராகலின் அவ்வுள்ளநிகழ்ச்சியை வெளிப்படுப்பது சத்துவமாகலின் அவை பதினாறும் எட்டாயடங்குமாகலின், 3அவை ஈரெட்டுப் பதினாறாகுமென்பது. மற்றிவை பண்ணைத்தோன்று வனவாயின், 4இது பொருளோத்தினுள் ஆராய்வதென்னை 5நாடக வழக்கத்தானே ஒருவன் செய்ததனை ஒருவன் வழக்கினின்றும் வாங்கிக்கொண்டு பின்னர்ச் செய்கின்றதாகலானும், வழக்கெனப்படாதாகலானும், ஈண்டு ஆராய்வது ‘பிறிதெடுத் துரைத்தல்’ என்னுங் குற்றமாமென்பது கடா. அதுவன்றே, 6இச்சூத்திரம் 7’பிறன்கோட் கூறல்’ என்னும் உத்திவகையாற் கூறி அதுதானே மரபாயிற்றென்பது. (1)
1. இருவகை நிலமென்பன சுவைக்கப்படுபொருளும் சுவைக்கின்றவனும் என்பது பேராசிரியர் கருத்து. 2. அவை--பொருளும் பொறியும். 3. அவை--முப்பத்திரண்டும். 4. இது--மெய்ப்பாடு. 5. நாடக வழக்கத்தானே செய்கின்றதாகலானும் என இயைக்க. 6. இச்சூத்திரம்--இச் சூத்திரப் பொருள்கள். 7. பிறன்கோட்கூறல்--பிறன் மதமெடுத்துரைத்தல். எனவே கூத்தநூலார்க்குரியதை இப்பொருளியலுள் தாமும் எடுத் |