பக்கம் எண் :

பொருளதிகாரம்7

[பதினாறாயடங்கியவை எட்டாயுமடங்குமெனல்]

250.நாலிரண் டாகும் பாலுமா ருண்டே

இது, மெய்ப்பாட்டின் அடக்கங் கூறுகின்றது.

இ-ள் : முப்பத்திரண்டு மெய்ப்பாடும் பதினாறாதலே யன்றி எட்டாதலும் உண்டு என்றவாறு.

அவை: வீரம் அச்சம் வியப்பு இழிபு காமம் அவலம் நகை நடுவுநிலை யென்பன. இவற்றின் விகாரமாகிய சத்துவங்க ளெட்டனையும் இவற்றுளடக்கி எட்டாக்கிக் கூறியவாறிதுவென்பது. நாலிரண்டாதலு முண்டென்னாது பாலென்றதனான் எட்டாதலே யன்றி அவை ஒன்பதாதற்குப் பகுதியுமுடையவென்பது; என்னை?

“உருத்திரந் தன்னோ டொன்ப தாகும்”

என்பவாகலின் 1உம்மை, இறந்தது தழீஇயிற்றாதலான் இவையும் பண்ணைத்தோன்றிய எண்ணான்கெனப்பட்டனவற்றுப் பகுதியென இதுவும் பிறன்கோட் கூறியவாறாயிற்று. மற்றிவற்றது பயனென்னையெனின், பொருளதிகாரத்துக் கூறுகின்ற வழக்கியலே 2அவையுமென்பது 3கூறி, அச்சுவைக்கு ஏதுவாய பொருளினை அரங்கினுள்நிறீஇ, அதுகண்டு குறிப்புஞ் சத்துவமும் நிகழ்த்துகின்ற கூத்தனையும் அரங்கிற்றந்து, பின்னர் 4அவையரங்கினோர் அவன்செய்கின்ற மெய்ப்பாட்டினை உணர்வராக வருகின்ற முறைமையெல்லாம் நாடகவழக்கிற்கே உரிய பகுதியெனவும், அப்பகுதியெல்லாம் ஈண்டுணர்த்தல் வேண்டுவ


துரைத்தார் என்றபடி. உத்திவகையாற் கூறி அதுதானே இதற்கும் (பொருளோத்திற்கும்) மரபாயிற்று என்க. கூறி--கூறப்பட்டு. அதுதானே--அங்ஙனங் கூறப்பட்ட அப்பொருடானே. கூறியதுதானே என ஒரு சொல்லாகக் கொள்ளின் கூறப்பட்டதுதானே எனப் பொருள் கொள்க.

1. பாலும் என்பதிலுள்ள உம்மை முப்பத்திரண்டு பதினாறாதலேயன்றி எட்டாதலும் உடைய என நிற்றலால் இறந்தது தழீஇயிற்று.

2. அவையென்றது எட்டு மெய்ப்பாட்டினையும்.

3. கூறிக் கூறியவாறு என இயைக்க.

4. அவை அரங்கு -- அவையாகிய அரங்கு.