பக்கம் எண் :

606செய்யுளியல்

[குறுஞ்சீர் வண்ணம் இதுவெனல்]

533. குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்.

இ--ள் : குற்றெழுத்துப் பயில்வது குறுஞ்சீர் வண்ணம் என்றவாறு.

“குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி.”

(அகம். 4)

என வரும்.

(221)

[சித்திரவண்ணம் இதுவெனல்]

534.சித்திர வண்ண
நெடியவுங் குறியவு நேர்ந்துடன் வருமே.

இ--ள் : சித்திரவண்ணம் நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விராஅய்ச் செய்யப்படுவது என்றவாறு.

அது,

“சார னாட நீவர லாறே.”

என வரும்.

சித்திரவண்ணமென்பது பல வண்ணம்படச் செய்வதாகலின் அப்பெயர்த்தாயிற்று.  

(222)

[நலிபுவண்ணம் இதுவெனல்]

535.நலிபு வண்ண மாய்தம் பயிலும்.

இ--ள் : ஆய்தம் பயின்றுவருவது நலிபுவண்ணமாம் என்றவாறு. அஃது,

“அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை.”

(குறள். 178)

எனவும்,

“னஃகான் றஃகா னான்க னுருபிற்கு.”

(தொ. எழு. 123)

எனவும் வரும். 1நலிபென்பது, ஆய்தம்.

(223)

[அகப்பாட்டு வண்ணம் இதுவெனல்]

536. அகப்பாட்டு வண்ண
முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே.

இ--ள் : அகப்பாட்டு வண்ணமென்பது, இறுதியடி இடையடிபோன்று நிற்பது என்றவாறு.


1. நலிபு--நலிந்துச்சரிப்பது.