[புறப்பாட்டு வண்ணம் இதுவெனல்] 537. | 1புறப்பாட்டு வண்ண முடிந்தது போன்று முடியா தாகும். |
இ--ள் : புறப்பாட்டு வண்ணமென்பது, இறுதி 2யடிப் புறத்ததாகவும் தான் முடிந்ததுபோன்று நிற்றல் என்றவாறு. “இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே.” (புறம். 363) என்புழி, ஈற்றயலடி ‘முன்னிய வினையே’ என முடிந்தது போன்று முடியாதாயிற்று. (225) [ஒழுகுவண்ணம் இதுவெனல்] 538. | ஒழுகு வண்ண மோசையி னொழுகும். |
இ--ள் : முற்கூறிய வகையானன்றி 3ஒழுகியலோசையாற் செல்வது ஒழுகுவண்ணம் என்றவாறு. ஒழிந்தனவும் ஒழுகுமாயினும் அவை வேறு வேறு இலக்கண முடையனவென்பது. “அம்ம வாழி தோழி காதலர்க் கின்னே பனிக்கு மின்னா வாடையொடு புன்கண் மாலை யன்பின்று நலிய வுய்யல ளிவள்.” (யா. வி. ப. 386) என வரும். (229) [ஒரூஉவண்ணம் இதுவெனல்] 539. | ஒரூஉ வண்ண மொரீஇத் தொடுக்கும். |
இ--ள் : யாற்றொழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறிதொன்றனை அவாவாமை அறுத்துச் செய்வது ஒரூஉவண்ணம் என்றவாறு. ஒரீஇத் தொடுத்தலென்பது, எல்லாத் தொடையும் ஒரீஇச் செந்தொடையால் தொடுத்தலென்பாரும் உளர். செந்தொடையுந் தொடையாகலான் அற்றன்றென்பது; அது,
1. இதனுரை தெளிவில்லை. இளம்பூரணருரை சிறப்பாகும். 2. இறுதியடிப்புறம்--இறுதி அடியின் புறமாக என்றது ஈற்றயலடியை. ஏகாரம் வந்தமை குறித்து இவ்வாறு கூறினார். இறுதியடி புறத்ததாகவும் என்று மிருந்திருக்கலாம். 3. ஒழுகியவோசையாற் செய்வது என்பது நச்சினார்க்கினியருரை. |