பக்கம் எண் :

610செய்யுளியல்

என்புழி, ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் அறுத்தொழுகிய அகைப்புவண்ணமாம்.

(229)

[தூங்கல் வண்ணம் இதுவெனல்]

1542. தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்

இ--ள் : தூங்கல் வண்ணந் தூங்கலோசைத்தாகி வருவது என்றவாறு.

வஞ்சியென்பது, வஞ்சித் தூக்குப்போல இதுவும் அற்றுச் சேறலுடைத்தென்பது. அது,

“யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின்
 றானூட யானுணர்த்தத் தானுணரான்.”

(முத்தொ. 104)

என நின்ற தொடர்நிலைக்கண்ணே அத்தூங்கல் கண்டு கொள்க. இக்கருத்தறியாதார் கலிப்பாவினுள் வஞ்சிப்பாப் பிறக்குமெனவும் வஞ்சியுட் கலிப்பாப் பிறக்குமெனவும் மயங்குப.

(230)

[ஏந்தல் வண்ணம் இதுவெனல்]

543. ஏந்தல் வண்ணஞ்
சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும்.

இ--ள் : சொல்லிய சொல்லானே சொல்லப்படும் பொருள் சிறப்பச்செய்வது ஏந்தல்வண்ண மென்றவாறு.

ஏந்தலென்பது, மிகுதல்; ஒரு சொல்லே மிக்கு வருதலின் ஏந்தல்வண்ண மென்றானாயிற்று. அது,

“வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்.”

(நாலடி. 39)

என வரும்.

(231)

[உருட்டுவண்ணம் இதுவெனல்]

544. உருட்டு வண்ண மராகந் தொடுக்கும்.

இ--ள் : உருட்டிச் சொல்லப்படுவது அராகமாகலின் அராகந் தொடுப்பது உருட்டுவண்ணமாம் என்றவாறு.

“உருமுரறு கருவிய பெருமழை தலைஇய.”

(அகம். 158)

எனவும்,


1. இதற்கு இளம்பூரணருரை பொருத்தமானது.