பக்கம் எண் :

பொருளதிகாரம்611

“எரியுரு வுறழ விலவ மலர.”

(கலி. 33)

எனவும் வரும். இது நெகிழாது உருண்டவோசையாகலிற் குறுஞ்சீர் வண்ணமெனப்படாது உருட்டுவண்ணமெனப்பட்டது.

(232)

[முடுகுவண்ணம் இதுவெனல்]

545. முடுகு வண்ண
மடியிறந் தோடி யதனோ ரற்றே.

இ--ள் : முடுகுவண்ணமென்பது, 1நாற்சீரடியின் மிக்கு ஓரடி அராகத்தோடொக்கும் என்றவாறு. அது,

“நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத்
 தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக
 வேய்புரை மென்றோட் பசலையு மம்பலும்.”

(கலி. 39)

என வரும்.

இவற்றைக் கொச்சகம் அராகமெனவுஞ் சொற்சீரடியும் முடுகியலடியு மெனவும் பரிபாடற்கு வேறுபடுத்தோதினான் 2இவ் வேறுபாடு நோக்கியென்பது.

(233)

[வண்ணங்கள் மேற்கூறிய இவையே எனல்]

546.வண்ணந் தாமே இவையென மொழிப.

இது புறனடை.

இ--ள் : வண்ணமென்பன சந்தமாதலான் அச் சந்தவேற்றுமை செய்வன இவையல்லதில்லை என்றவாறு.

எனவே, என் சொல்லப்பட்டதாம்: நான்கு பாவினொடும் இவற்றை வைத்துறழவும், அவை மயங்கிய 3பொதுப்பா இரண்டினோடு உறழவும் நூற்றிருபதாகலாலும், 4உயிர்மெய்வருக்க மெல்லாவற்றோடும் உறழ்ந்து பெருக்கின் எத்துணையும் பலவாகலும், இனிப் பிறவாற்றாற் 5சிலபெயர் நிறீஇ அவற்றால்


1. அராகந் தொடுத்த வடியோடு பிறவடி தொடர்ந்தோடுவது எனவும் பாடம்.

2. இவ்வேறுபாடு என்றது அராகத்திற்கும் முடுகுக்கு முள்ள வேறுபாடு.

3. பொதுப்பா இரண்டு--மருட்பா, பரிபாடல்.

4. உயிர்வருக்கம் மெய்வருக்கம் என்க.

5. பிறவாற்றாற் சிலபெயர் என்றது தூங்கிசை ஏந்திசை முதலிய பெயரை. இது அவிநயனார் கொள்கை. அதனை; “தூங்கேந் தடுக்கல் பிரிதன் மயங்கிசை” என்னும் யாப்பருங்கலப் பாவாலறிக.