உறழ்ந்து பெருக்க வரையறையிலவாகலும் உடையவாயினும் இவ்விருபது வகையானல்லது சந்த வேற்றுமை விளங்காதென்பது கருத்து. (234) [வனப்புள் அம்மை இதுவெனல்] 547. | வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே. |
இது தொகைச்சூத்திரத்துள், 1“ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும்.” (313) எனக் கூறுசெய்து நிறீஇப், பின்னர் எட்டுறுப்புக் கூறினானன்றே? இவை அவற்றோடொத்த இலக்கணத்தவன்மையான்; என்னை? அவை ஒரோ செய்யுட்கே ஓதிய உறுப்பாகலானும் இவை பல செய்யுளுந் திரண்டவழி இவ்வெண்வகையும் பற்றித் தொடுக்கப்படுமெனக் கூறப்பட்டதாகலானு மென்பது. இவற்றை வனப்பென்று கூறப்படுமாறென்னை? 1அச்சூத்திரத்துப் பெற்றிலமாலெனின்,--வனப்பென்பது, பெரும்பான்மையும் பல உறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் அழகாகலின் அவ்வாறு கோடும். அதனாற் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய 2தொடர்நிலையதே வனப்பென்னும் பெயர்ப்பகுதி வகையான் ஏற்பதென்பது. அஃதேல், இவ்வெட்டுந் தனிவருஞ் செய்யுட்கண் வந்தால் அழகுசெய்யாவோவெனின்,--அவைபோல இவை தனிவருஞ் செய்யுட்குமாகுமென்றற்கன்றே அவ்விரு பத்தாறுறுப்போடும் இவற்றை ஓரினப்படுத்து ஓதியதென்பது.3அஃது, இயைபிற்கொப்ப வாராதென்பது முன்னர்ச் (522) சொல்லுதும். இதனானே 4முன்னையுறுப்புக்கள் தொடர்நிலைச் செய்யுட்கு வருமென்பதூஉங் கொள்க; அல்லாக்கால், மாத்திரை முதலாகிய 5ஒரோவுறுப்பான் அழகு பிறவாதாகிய
1. அச் சூத்திரம்--1-ம் சூத்திரம். 2. தொடர்நிலையதே--தொடர்நிலைச் செய்யுளதே. தொடர்நிலைச் செய்யுளிலக்கணந் தொல்காப்பியர் கூறிற்றிலராதலின் இது பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. 3. அஃது--தனிச் செய்யுளில் வருவது. 4. முன்னையுறுப்புக்கள்--மாத்திரை முதலியன. அல்லாக்கால்--தொடர்நிலைக்கென்று கொள்ளாக்கால். இதனை நீக்கியும் விடலாம். 5. ஒரோ எனப் பின்வருவது இங்குஞ் சேர்க்கப்பட்டது. அது வேண்டியதில்லை. |