செல்லும் 1இவற்றையே வனப்பென்று ஒரோ செய்யுட்கே கொள்ளினென்பது. இங்ஙனம் இருபத்தாறும் எட்டுமென வகுப்பவே அவை 2அகமென்பன, தனிநிலைச் செய்யுட்கு முற் கூறப்படா, இத் தொடர்நிலைச் செய்யுட்கு முற் 3கூறுமென்பது; இனி, இவற்றைச் சூத்திரத்தான் வனப்பென்னுங் குறி யெய்து விக்க வேண்டுவானாகச் சூத்திரத்தை, “வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலின்.” (547) என்பது பாடமாக உரைத்தானென்க; அதுவும் 4அறிந்தவாறே கொள்க. இ--ள் : சிலவாய மெல்லியவாய சொல்லோடும் இடையிட்டு வந்த பனுவலிலக்கணத்தோடும் அடிநிமிர்வில்லது அம்மையாம் என்றவாறு. ‘அடிநிமிராது’ எனவே, அம்மையென்பது முழுவதும் ஒரு செய்யுளாகல்வேண்டும்; வேண்டவே, அஃது உறுப்பன்றாகிய செல்லும்: அதனை உறுப்பெனல்வேண்டுமாதலான் அடிநிமிராதெனப்பட்ட செய்யுள் உறுப்பாக அவை பல தொடர்ந்து முடிந்து ஈண்டுச் செய்யுளாமென்பது. சிலவாகவென்பது, 5எண்ணுச் சுருங்குதல். மெல்லியவாதல், சிலவாகிய சொற்கள் எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தினான் வருவது. அடி நிமிராதென்றது, ஐந்தடியின் ஏறாதென்றவாறு. தாயபனுவலோடென்றது, அறம் பொருள் இன்பமென்னும் மூன்றற்கும் இலக்கணஞ் 6சொல்லுப (போன்று) வேறிடை யிடை அவையன்றியுந் தாய்ச் செல்வதென்றவாறு; அஃதாவது, பதினெண்கீழ்க்கணக்கென வுணர்க. அதனுள் இரண்டடியானும் ஐந்தடியானும் ஒரோ செய்யுள் வந்தவாறும், அவை
1. இவற்றை--அம்மை முதலியவற்றை. 2. அகம்--உள்ளுறுப்பு. 3. கூறும்--கூறப்படும் என்றிருத்தல்வேண்டும். 4. கொள்க என்றது சிலர் அப்பாடம் கொள்ளாமையின். 5. எண்ணுச் சுருங்கல் என்றது சில சொற்களால் செய்யுள் ஆக்கப்படுதலை. 6. சொல்லுவ என்றிருத்தல்வேண்டும்போலும். |