சிலவாய மெல்லிய சொற்களான் வந்தவாறும், அறம் பொருள் இன்பமென அவற்றுக்கு இலக்கணங் கூறிய பாட்டுப் பயின்று வருமாறும் 1கார்நாற்பது களவழிநாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டுகொள்க. “பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து மிருடீர வெண்ணிச் செயல்.” (குறள். 675) என்பது இலக்கணங் கூறியதாகலிற் பனுவலோடென்றான். “மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று.” (குறள். 1112) என இஃது இலக்கியமாகலாற் றாயபனுவலெனப்பட்டது. 2இவை தனித்துவரினும் அவ்வனப்பெனப்படும்; தாவுதலென்பது, இடையிடுதல். இவ்விருவகையுஞ் செய்யுளெனப்படும். அம்மையென்பது, குணப்பெயர்; அமைதிப்பட்டு நிற்றலின் அம்மையென்றாயிற்று. அதன் உள்ளுறுப்பாகிய பாட்டுக்கடோறும் மாத்திரையுறுப்பு முதலாகிய உறுப்பினுள் ஏற்பன பலவும் வருமாறும், இவ்வனப்பினுள் ஏற்பன பலவும் வருமாறும் அறிந்துகொள்க. (235) [அழகு இதுவெனல்] 548. | செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பி னவ்வகை தானே யழகெனப் படுமே. |
இஃது, இரண்டாமெண்ணு முறைமைக்கணின்ற அழகுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : 3திரிசொற் பயிலாது செய்யுளுட் பயின்றுவரும் மொழிகளாற் சீரறுத்துப் 4பொலிவுபட்ட யாப்பின் பொருள அழகு என்றவாறு. ‘அவ்வகை’ என்றதனால், அவை வேறுவேறு வந்து ஈண்டிய தொகைநிலைச் செய்யுளென்றவாறு. அவையாவன: நெடுந்
1. இவ் வாக்கியத்தில் யாதோ தவறியிருத்தல் வேண்டும். 2. இலக்கண இலக்கியம். 3. திரிசொல் என்பது தெரிசொல் என்றிருத்தல் வேண்டும். என்னை? செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் என்றமையின் நச்சினார்க்கினியர் வழக்குச் சொற்பயிலாதென்று கூறுதல் நோக்குக. அங்ஙனம் பாடமுள்ளது. 4. பொலிவுபட யாப்பின் என்றிருந்திருக்கலாம். பொருள என்பதிற் சிதைவிருக்கிறது. |