பக்கம் எண் :

பொருளதிகாரம்625

இன்மையின் அவையும் முடிபுடையன ஆகாவாயினுங் காயாப் பனையை ஆண்பனையென்றும், காய்ப்பனவற்றைப் பெண்பனையென்றும் வழங்குப. இவையெல்லாம் வழக்காகலிற் செய்யுளுள் வருமாறு அறிந்துகொள்ளப்படும். இவற்றுக்கு மேல் வரையறை கூறும் வழி (606--22) உதாரணங் காட்டுதும்

. (3)

[இளமைப் பெயர்களுள்; பார்ப்பும் பிள்ளையும்
இவற்றிற்குரியவெனல்]

559. அவற்றுட்
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை.

இது, நிறுத்தமுறையானே இளமைப்பெயருண் முற்கூறிய பார்ப்பினைக் கூறுவான் அதனோடொப்புமைகண்டு பிள்ளைப் பெயருங் கூறுகின்றது.

இ--ள் : இவ்விரண்டும் புள் இளமைக்குரிய என்றவாறு.

இவையெல்லாம் இக்காலத்து வழக்கினுள் அரியவாகலின் சான்றோர் செய்யுளுட் காணப்படும்; 1அல்லன வழக்கின்மேற் காட்டுதும்.

“மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்கு.”

(அகம். 31)

எனவும்,

“இல்லிறைப் பள்ளிதம் பிள்ளையொடு வதியும்.”

(குறு. 46)

எனவும்,

“பைதற் பிள்ளைக் கிளிபயிர்ந் தாஅங்கு.”

(குறுந். 139)

எனவும் இவை பருந்தும் ஊர்க்குருவியும் கிளியுமென்னும் பறவைமேல் வந்தன; பிறவும் அன்ன.

2புள்ளுக்குலம் பலவாகலான் இச்சூத்திரத்துள் அடங்கிய மரபு எத்துணையும் பலவாதனோக்கி முதற்சூத்திரத்துட் பார்ப்பினை முற்கூறினானென்பது.

(4)


1. அல்லன--வழக்கின் அரியவல்லாதன.

2. புள்ளினம் பலவாதலின், அவற்றிற்கு வரும் மரபாகிய பார்ப்பும் பலவாதனோக்கி அதனை முற்சூத்திரத்து முற்கூறினார் என்றபடி.