பக்கம் எண் :

பொருளதிகாரம்631

[குரங்கும் குட்டி என்னும் பெயர்பெறும் எனல்]

568. கோடுவாழ் குரங்குங் குட்டி கூறுப.

இ--ள் : கோட்டினையே வாழ்க்கையாகவுடைய குரங்குங் குட்டியென்று கூறப்படும் என்றவாறு.

‘கோடுவாழ் குரங்கு’ எனவே, குரங்கின் பிறப்புப் பகுதியெல்லாங் கொள்க. அவை, குரங்குக்குட்டி முசுக்குட்டி 1ஊகக்குட்டியென்பன. உம்மை இறந்தது தழீஇயிற்றாதலான் மேற் கூறிய யாடு முதலாகிய ஐந்து சாதிக்குங் குட்டியென்னும் பெயர் கூறப்படுமென்பது; அவை, யாட்டுக்குட்டி குதிரைக் குட்டி நவ்விக்குட்டி உழைமான்குட்டி புல்வாய்க்குட்டி என வரும்.

(13)

[குரங்கிற்கு மகவு முதலியனவும் உரியவெனல்]

569. மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பு
மவையு மன்ன வப்பா லான

இ--ள் : மேலைச் சூத்திரத்து எடுத்தோதிய குரங்கிற்குக் குட்டியென்னும் பெயரேயன்றி மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்புமெனப்பட்ட இந்நான்கும் குட்டியென்னும் பெயர்போல அக்குரங்கின் பகுதிக்கு உரியவாம் என்றவாறு.

“உயர்கோட்டு,
 மகவுடை மந்திபோல.”

(குறுந். 29)

எனவும்,

“குரங்குப் பிள்ளை.”

எனவும்,

“வரையாடு வன்பறழ்த் தந்தை.”

(குறுந். 26)

எனவும்,

“ஏற்பன வேற்பன வுண்ணும்
 பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே.”

(குறுந். 278)

எனவும் வரும். ‘அன்ன’ என்பதனான், முன்னையவற்றோடொக்கும்; மிகுதி குறைவு இலவென்பதாம்.

“வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும்.”

(குறுந். 38)

என (564) இலேசினாற் கூறிப்போந்தமையின் ஈண்டு 2அது கூறானாயினான்; அன்றி, அஃது இத்துணைப் பயிலாமையானு


1. ஊகம்--குரங்குள் ஒருசாதி.

2. அது--குருளை.