மென்க ஏழாமுறை நின்ற மகவினை ஈண்டு வைத்தான் 1அதிகாரப்பட்ட பெயர்க்குரிமையானென்பது. (14) [கன்றென்னும் பெயர்க்குரியன இவை எனல்] | 570. | யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையு மானோ டைந்துங் கன்றெனற் குரிய. |
இ--ள் : ஐந்தாம் எண்ணு முறைமைக்கண் நின்ற கன்றென்னும் பெயர்க்கு இவை உரிய என்றவாறு. அவை, யானைக்கன்று குதிரைக்கன்று கழுதைக்கன்று கடமைக்கன்று ஆன்கன்று என வரும். “கன்று2கா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம் புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன் வெண்கோட் டியானை விளிபடத் துழவும்.” (அகம். 68) என்பது, யானைக்கன்று. “கன்றுபுகு மாலை நின்றோ ளெய்தி.” என்பது, ஆன்கன்று: பிறவும் 3அன்ன உளவேற் கொள்க. இனி, ‘உரிய’ என்றதனானே, மான்கன்று குதிரைக்குட்டியென்பனவுஞ் சொல்லுப. (15) [கன்றென்னும் பெயர் இவற்றிற்குமுரியதெனல்] | 471. | எருமையு மரையும் வரையா ராண்டே. |
இ--ள் : எருமையும் மரையும் கன்றெனப்படும் என்றவாறு. அவை, எருமைக்கன்று மரையான்கன்று என்பன வழக்கு. 4“கன்றுடை மரையா துஞ்சும்.” (குறுந். 115) 5“கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . குன்ற நாடற் கண்டவெங் கண்ணே.” (குறுந். 241)
1. அதிகாரப்பட்ட பெயர்--குரங்கு. 2. கால் ஒய்யும்--காலை இழுக்கும். 3. அன்ன உளவேல்--அவைபோல்வன உளவேல். 4. இது ‘மென்னடை மரையா’ என்று டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதித்த குறுந்தொகையுரைப் பதிப்பிற் காணப்படுகின்றது. ‘கன்றுடை’ என்றும் பாடமோ வேறு நூலடியோ என்பது ஆராயத்தக்கது. 5. இவ்வடி முற்பதிப்புக்களில் விடப்பட்டது. கன்று--எருமைக்கன்று. |