பக்கம் எண் :

644மரபியல்

மற்றுப் பாம்பிற்குச் செவியுங் கண்ணும் ஒன்றேயாகிக் கட்செவியெனப்படுமாகலின் ஐயறிவில்லை பிறவெனின்,--பொறியென்பன வடிவுநோக்கினவல்லவாகலின் ஒன்றே இரண்டுணர்விற்கும் பொறியாமென்பது.

கிளியென்பது பறவையாகலின், அதனை வேறோதுகவெனின்,--1முன்னையவற்றிற்கும் பறவையென்றோதியதிலனாகலான் அவ்வச் சூத்திரங்களானே எல்லாம் அடங்குமென்பது.

&மற்றுப் புல்லும் மரனும் முதலாக இவ்விரண்டு பிறப்பெடுத்தோதி, ஒழிந்தனவற்றையெல்லாம் ‘பிறவுமுள’ எனப் புறனடுத்ததென்னையெனின்,--அவை வரையறையிலவாகலின், அங்ஙனங் கூறினான்; அல்லதூஉம், மக்களும் புள்ளும் விலங்கும் முதலாயின ஓரறிவினவென்றும், ஈரறிவினவென்றும் எண்ணி வரையறுக்கப்படாமையானும் அவ்வாறு கூறினானென்பது.

(32)

[ஆறறிவுடைய உயிர் மக்கள் எனல்]

588.மக்க டாமே யாறறி வுயிரே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

இஃது ஆறறிவுயிர் கூறுகின்றது.

இ--ள் : மக்களெனப்படுவார் ஐம்பொறியுணர்வேயன்றி மனமென்பதோர் அறிவும் உடையர்; அக்கிளைப்பிறப்பு வேறும் உள என்றவாறு.

முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடூஉ மகடூஉ மக்களெனப்படும். அவ்வாறு உணர்வினுங் குறைவுபட்டாரைக் குறைந்தவகையறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப் பிறப்பினுட் சேர்த்திக் கொள்ள வைத்தானென்பது. அவை, ஊமுஞ் செவிடுங் குருடும்போல்வன. கிளையெனப்படுவார்--தேவருந் தானவரும் முதலாயினார். பிறப்பென்றதனால், குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடை


1. முன்னைய--தும்பி வண்டு தேனீ முதலியன. கிளி பேசுபவாதலின் மாக்களுள் அடங்குமெனக் கருதினர்போலும் பாம்பு என்றது. நாகர் சாதியை நோக்கிப்போலும். அன்றி இவை விலங்குள் அடங்குமென்றலுமாம். முன்னையவற்றிற்குப் பறவை வேறோதியதிலனாகலான் என்றும் இவ்வாக்கியம் இருந்திருக்கலாம்போலும். முன்னைய--முற்கூறிய பிறப்புக்கள்.