யனவெனப்படும் 1மனவுணர்வுடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிராயடங்குமென்பது. ‘தாமே’ எனப் பிரித்துக் கூறினமையான் நல்லறிவுடையாரென்றற்குச் சிறந்தாரென்பதுங் கொள்க. (33) [மேற்கூறிய ஆண்பாற் பெயருள் களிறு என்னும் பெயர் இதற்குரியது எனல்] | 2589. | வேழக் குரித்தே விதந்துகளி றென்றல் கேழற் கண்ணுங் கடிவரை யின்றே. |
3‘மக்கடாமே யாறறிவுயிர்’ எனப் பிரித்துக் கூறினமையால், ஆண்பால் அதிகாரப்பட்டதுகண்டு மற்றை விலங்கினுள் ஆண்பாற்குரியன கூறிய தொடங்கியவாறு. நிறுத்தமுறையாற் கூறாது களிற்றினை முற்கூறினான், அப் பெயர் விலங்கினுட் சிறந்தமையானென்பது. ஏறும் ஏற்றையும் பயின்று வரவினவாகலின் முதற் சூத்திரத்துண் (556) முற் கூறினானென்பது. இ--ள் : யானைக்கு விதந்து களிறென்றலுரித்து; கேழற்கண்ணுஞ் சிறுபான்மை வரும் என்றவாறு. ‘விதந்து’ என்ற விதப்பினால், களிறென்பது சாதிப்பெயர் போலவும் நிற்குமென்பது; அஃதாவது, யானையென்னுஞ்
1. வாலி சுக்கிரீவன் அநுமன் முதலிய குரங்குச் சாதிகள் ஆறறிவுடையனவாக இராமாயணத்துட் கூறப்படலின் இவ்வாறு கூறினர்போலும். 2. இதன்முன் ஒரு சூத்திரம் இளம்பூரணத்திலுள்ளது. 3. மக்கடாமே ஆறறிவுயிர் என்று பிரித்துக் கூறினமையானே, அது மக்களுள்ளும் தக்கது இன்னது தகாதது இன்னது என்று பகுத்துணரும் ஆண்பாலாரையே குறிக்கும் என்பது இவர் கருத்து. பிறரும் இவ்வாறு கருதுவாருமுளர். யானைக்கும் ஆறறிவுண்டென்பது சிலர் கருத்து. அதுபற்றி மக்களுக்கடுக்க வைத்தாரெனினு மமையும் இங்ஙனமன்றி 24-ஞ் சூத்திரத்தில் ஓரறிவுயிர் அதிகாரப்பட்டமையின் அதுமுதலாக ஓரறிவுயிர் முதறியவற்றை விளக்கி அதன்மேல் மீளவும் தலையில் வைத்த முறைப்படி ஆண்பாற்பெயர் எடுத்துக்கொண்டார் என்றல் பொருத்தமாம். இளம்பூரணருரை நோக்குக. |