“நின்மக ளுண்கண் 1பன்மா ணோக்கிச் சென்றோன் மன்றவக் குன்றுகிழ வோனே பகன்மா யந்திப் படுசுட ரமையத் தவன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனள்.” (அகம்-48) என்பது, உருவுநிறுத்த காமவாயில். “கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும் பாயல் பெறேஎன் படர்கூர்ந்து.” (கலி-37) என்புழி, முன்னத்திற் காட்டுதலல்லது தானுரையானென்பது தலைமகனிறையுடைமை கூறியவாறு. “அவன் வயிற் 2சேயேன்மன் யானுந் துயருழப்பேன்.” (கலி-37) என, தன்னிறையுடைமை காரணத்தாற் காமக்குறிப்பு நிகழ்ந்தவாறு, 3”பெண்ணன் றுரைத்த னமக்காயின்.” (கலி-37) என்பதும் அது. இது, தோழி கூற்றன்றோவெனின், அதுவும் தலைமகள் குறிப்பெனவே படுமென்பது முன்னர்க் கூறினாமென்பது. (273) 4”தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேரன்.” (அகம்-4) என்பது அருள்பற்றிப் பிறந்த காமக்குறிப்பு. “அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதரும்.” (அகம்-22) என்னும் பாட்டினுள்,
1. பன்மாணோக்கி என்றதனானும், அவன் மறைதேஎம் நோக்கி என்றதனானும் உருவுநிறுத்த காமவாயில் என்பது பெறப்படும். 2. சேயேன்--தூரியேன், உறவில்லாதேன். அவன் துயர் கண்டு துயருழப்பேன் என்றதனால் தோழியின் நிறையுடைமை பெறப்பட்டது. என்னை? அவன் துயருக்கிரங்கித் துயருழந்தமையைப் பிறரறியாமை மறைத்தமையின். இதுவும் முன்னதுந் தோழி கூற்றாதலின் இவ்வுதாரணங்கள் சிறப்பில். 3. நமக்காயின் நின்வருத்தத்திற்கு நானும் வருந்தினே னென்று கூறல் பெண்டன்மையன்று என்றமையின் இதுவும் நிறையாயிற்று. என்னை? தன்வருத்தத்தை மறைத்தமையின். 4. தாதுண்பறவை--வண்டு. அதன் வருத்தத்திற்கஞ்சினானெனவே அருள்பற்றியதாயிற்று. |