இ-ள் : நிம்பிரி--1பொறாமை தோன்றுங் குறிப்பும்; அவை ‘இந்நாட் சிறிது பொறுத்தாய்’ என்றாற்போல்வன. கொடுமை--கேடுசூழ நினையுந் தீவினையுள்ளமும்; வியப்பு--தலைமகள்பால் தெய்வத்தன்மை கண்டான்போல் வியந்தொழுகுதலும்; இனி குணத்தின்மேற்கொண்டு தன்னை வியத்தலெனினும் அமையும். புறமொழி--புறங்கூற்றும்; வன்சொல்--கண்ணோட்டமின்றிச் சொல்லுஞ் சொற்களும்; பொச்சாப்பு--2கடைப்பிடியின்றி ஞெகிழ்ந்திருத்தலும்; மடிமை--சோம்புள்ளமும். குடிமை--இவள் இழிந்த பிறப்பினளெனத் தன்னை நன்கு மதித்தொழுகுதலும்; இன்புறல்--ஒருவரொருவரிற்றாமே இன்புறுகின்றாராக நினைத்தலும்; ஏழைமை--நுழைந்த வுணர்வினரன்றி வரும் வெண்மையும்; மறப்பு--மறவியும்; ஒப்புமை--இன்னாளையொக்கும் இவளென்று அன்புசெய்தலும்; என்றிவை இன்மை என்மனார் புலவர்--இவையெல்லாம் 3இன்றி வருந் தலைமகன்கண் நிகழும் மெய்ப்பாடென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. எனவே, அவைதம்மை வரையறுத்துக் கூறாது அவற்றுக்கு ஆகாதன வரையறுத்துக் கூறினானென்பது. தலைமகட்குரிய மெய்ப்பாடாயின வரையறுத்துக் கூறினமையின் அவற்றுக்கு ஆகாதன கூறல்வேண்டுவதன்றென்பது. ஆகாதவற்றுக்கு உதாரணங் காட்டலாவதில்லை. (26) [மெய்ப்பாடுகளை அறிதற்குக் கருவி இவை எனல்] 275. | கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரு முணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியி னன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே. |
இது, மேற்கூறிய மெய்ப்பாட்டிற்கெல்லாம் புறனடை. “எள்ள லிளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான்கு.” (252)
1. பொறாமை--பொறுத்திராமை. அது சிறிது பொறுத்தாய் என்றதனால், பொறுத்திராமை தோன்றிற்றுப்போலும். 2. கடைப்பிடி--உறுதி. 3. இன்றிவரும் மெய்ப்பாடு எனவே இவை தலைமகன்கண் நிகழா என்றபடி. |