பக்கம் எண் :

பொருளதிகாரம்83

மெய்ப்பாட்டியல்

உதாரணச்செய்யுளுரை

______

252-ம் சூத்திரம்

1. (அவன்றான் குறையுற்று நிற்கின்ற காலத்து) யான் தன்னை இகழ்ந்து சிரித்தாலும் பலகாலும் வருவான். இது தோழி தலைவிக்குக் குறை நயப்பித்தது.

(கலி. 61)

2. (மனைப்புறத்தே வந்துநின்ற எந் தலைவனைக்கண்ட அன்னையானவள்) என்னை நோக்கி நீ மிகவும் நல்லை எனக்கூறிநக்குச் சென்றாள். இங்கே அன்னைக்குத் தன்னைத் தன் மகள் இகழ்ந்தாள் (மதித்திலள்) என்பது காரணமாக நகை பிறந்தது. இங்கே தலைவி கூற்றைத் தன் கூற்றாகத் தோழி கூறினாள் என்க.

(அகம். 248)

3. நம்மாற் சிரிக்கத்தக்கார் இவன் ஆளும் நாட்டை மிகுத்துச் சொல்லுவார். சிரிக்கத்தக்கார் என்பது வெகுளிபற்றி வந்த சிரிப்பு.

(புறம். 72)

4. நினது மெய்ந்நடுக்கத்தைக் காணும்படி ஒரு விளையாட்டைக்குறித்துக் கூறினார் அன்றி, உண்மையாகக் கூறினாரல்லர் என்றபடி. நகை-விளையாட்டு. இது தோழி கூற்று. (கலி. 13) (தன் இளமை என்றதில் தன் என்றது தலைவனை). தொல்--உரை.

5. (இது தனக்குப் பின்புறம் வந்துநின்ற தலைவனைக்கண்டு நக்கபுதல்வனை நோக்கித் தலைவி கூறியது) இந்த நன்குமதிக்கும் மகனல்லாதவன் பெற்ற மகன், நற்குணங்களல்லாதவற்றை நீ யொவ்வாதேகொள் என்று யாங் கோபிக்க யாரைநோக்கி நகும். இது தலைவி கூற்று. இது தன் இளமை பொருளாக நகை பிறந்தது. தன் என்றது புதல்வனை.

(கலி. 86)

6. நாவாற் பழகாத (பிறர்) நகைக்கத்தக்க இனியசொல். இது பிறரிளமை பொருளாக நகை பிறந்ததற்குதாரணம். தொல்--உரையுள் பிறர் என்றது புதல்வனை. புதல்வன் இளமைச் சொல் காரணமாக நகை பிறந்தது என்றபடி. நாவொடு பயிலாத தீஞ்சொல்-மழலை, நகை-மகிழ்ச்சிநகை.

(அகம். 16)

7. ஒரு சிரிப்பு வார்த்தையைத் தோழியே நீ கேள். இது தோழி கூற்று.

(அகம். 248)