4. ஐயோ என்று யான் அரற்றின் அவ்வுரைவழி வந்து புலி தாக்குமென்று புலிக்கு அஞ்சுவேன். இது, கணவனையிழந்தாள் காட்டிற் கணவனுடம்பைத் தழீஇநின்று கூறியது. (புறம். 255) 5. தெய்வத்தை ஒத்த கற்பொடு மடம்பொருந்த மெலிந்து நின் வருத்தத்தினிடத்தாயுமல்லை. அச்சம் வர எத்தன்மையாகுவாளோ? இவள் அளிக்கத்தக்காள் என்று என் வருத்தத்திற்கு இரங்கும் நின்னொடு யானும். இது தோழி கூற்று. என்பொருட்டு வருந்தினாளென்றுதோழியழிவிற்குத் தலைவி இரங்கினாள் ஆதலின் அதனை உட்கொண்டு என்னழிபிரங்கும் நின் என்றாள் என்க. (அகம். 73) 6. இது மடலேறுகின்ற தலைவன் சான்றோர்க்குக் கூறியது. ஒருத்தி மயங்கினமழைக்கு நடுவில் மின்னுப்போல வந்து தோன்றி தன்னொளியோடே தன்னுருவையும் என்னைக் காணப் பண்ணி என்னை அளிக்குந்தன்மையளாய் அளித்துப் பின்னர் என்னெஞ்சைத் தான் வரும் வழியாகக் கொண்டுவிட்டாள். அதனை முதலாகக்கொண்டு துயிலேன். (கலி. 139) 7. மனையின்கணியங்கும் மடப்பத்தையுடைய மயிலை அகப்படுத்திக்கொள்ளும் சொல்லாகிய வலையுடைய வேட்டைக்காரனாயினான். முன்பு; இதுபொழுது அள்ளிலைத் தாளிகொய்யாநின்றான். இது தாபதவாகை என்னுந் துறை. (புறம். 252) 8. பாலின்மையின் தோலாந் தன்மையோடு திரங்கித்துளை தூர்ந்த பொல்லாத வறிய முலையை வறிதே சுவைக்குந்தொறும் அழுகின்ற தனது பிள்ளையினது முகத்தைப் பார்த்து நீரால் நிரம்பிய ஈரிய இமையையுடைய குளிர்ந்த கண்ணையுடைய என்மனைவியது வருத்தத்தைப் பார்த்து (இந்த வருத்தந் தீர்த்ததற்குரியாய் நீயென) நினைந்து நின்பால் வந்தேன், நல்ல போரையுடைய குமண! இது காடுபற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச்சாத்தனார் சென்று பரிசில் கடாயது. (புறம். 164) 9. (யானையை வெட்டி வீழ்த்திய வாள்வெற்றியராய் எந்தலைவரொடு கிடந்தார் எம் புதல்வர்.) இப்பெற்றிப்பட்ட வென்றியும் உளவோ நமக்கென்று சொல்லி முதிய மறக்குடியிற் பிறந்த பெண்டிர் இன்புற்று உவகையால் அழ அதுகண்டு நாணிக் கூற்றம் இரங்கிய போர்க்களம். (புறம். 19) 254-ம் சூத்திரம் 1. பூண்செறிந்த தலையையுடைய பரிய தண்டுக்கோலை ஊன்றித் தளர்ந்து இருமல் இடையே நெருங்கின சில வார்த் |