தையையுடைய பெரியமுதுமையையுடையேமாகிய எங்களுக்கு. (புறம். 243) 2. புதல்வன் தாயேயென்று வஞ்சனையமைந்த பொய்ம் மொழிகளை அவர்தம்மிடத்திற் சாய்ந்து எம்பாற் பலகாற் சொல்லி எம்முதுமையை யெள்ளாதேகொள். அம்முதுமைக்கு நாங்கள் பொருந்துவோம். இது தலைவி கூற்று. (அகம். 6) 3. முதுமையுற்றுத் தலைவணங்கிய நின்னோடு யானும் போர்த்தொழிலைச் செய்தற்கு நாணுவேன், அதனால். 4. வாடையே நீ இமயத்தையும் துளக்கும் இயல்பினையுடையாய். துணையில்லாதவர்; இரங்கத்தக்கார்; பெண்கள்; அவர்களோடு மாறுபடுமிஃது என்ன பயனைத் தரும். (குறுந். 158) 5. கிழக்குக் கடலின் அலையிடத்தான பறத்தல் வலிகெட்ட நாரை வலிய தேரையுடைய சேரனது ‘தொண்டி’ யென்னுமூரின் முன்றுறையிடத்துள்ள அயிரைமீனாகிய அரிய இரையை விரும்பினாற்போல சேயளும் அரியளுமாயினாளை உள்ளினை; கிட்டாமையின் நோயையுடையையாயினாய் நெஞ்சே நோயைத் தரும் ஊழினையுடையாய். (அணவரல் - தலையை எடுத்தல் என்பது சாமிநாதையர் உரை.) இது அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. (குறுந். 128) 6. வருத்துதலால் வருத்துந்தகையளென யான் அவளை அறிவேன். அவள் தன்னை அத்தகையளென அறிந்திலள். (குறுந். 337) இது இரந்து பின்னின்ற தலைவன் கூற்றாதலின் தன்கட்டோன்றிய உயர்ச்சிபற்றி வந்த இளிவரலென்றார். 7. என்னிடத்து ஒரு காரியத்தை இரந்து நிற்பான்போல தன்னைப் பிறரா லிகழப்பட்டு எளியனாந்தன்மை தோன்றவும் சிலமொழி கூறும். இது தோழி கூற்று. (கலி. 47) 8. இவர் நம்மில் வலியரென்று கருகி அவர்க்கு வழிபாடு கூறியறியான். இவர் நம்மில் எளியரென்று கருதி அவரின்கண் மிகுத்துச் சொல்லியறியான். (புறம். 239) 9. ஒரு கையையுடைய யானையை எறிவேனோ? யானும் இரு கையினைச் சுமந்து வாழ்வேன். 255-ம் சூத்திரம் 1. தினைப்புனத்தில் ஒருபால் நின்றோனாகிய மலர்தார் மார்பனைக் கண்டோர் பலர். தோழியே! அவருள் அரிய இருட் |