கங்குலில் படுக்கையொடு பொருந்தி நீர்வாருங் கண்ணோடு நெகிழ் தோளினையுடையேன் யானொருத்தியுமே. அங்ஙனமாதற்குக் காரணம் என்னையோ? (அகம். 82) 2. நல்ல மந்தித்திரள் ஆச்சரியப்பட்டு நோக்க மூங்கில் வளராநின்ற மலைப்பக்கத்து உலாவியாடும் மயில் விழவுக்களத்திற் புக்கு நடிக்கின்ற விறலிபோலத் தோன்றுகின்ற நாட்டையுடையவன். (அகம். 82) 3. நிலத்தினும் அகலமுடையது; வானினும் உயர்ந்தது; கடலினும் அளவிடற்கரிய ஆழமுடையது; சாரலிடத்து வலிய தண்டையுடைய குறிஞ்சிமரத்தினது மலர்களைக்கொண்டு பெரிய தேனைச் செய்யும் (மலை) நாட்டையுடையவனான தலைவனோடு நட்பு. (குறுந். 3) இது தலைமகள் கூற்று. 4. குவளைமலரையணிந்த ஓதியையும் முத்துமணிபோலும் நகையையுமுடைய பேதைத்தன்மையை யுடையாளது திரண்ட கச்சினையுடைய முலையினை ஏந்தினாலும் கடைவிழியிற் சிறந்த கருமையையுடைய நெடிய கண்களையுடைய அப்பேதையினது இடையினும் சிறியதொன்று இல்லை. இது இடையின் சிறுமையை வியத்தலின் பிறன்கட்டோன்றிய சிறுமை வியப்பு. 5. எருமைபோலும் வடிவையுடைய கரியகற் பொருந்திய இடந்தோறும் பெற்றம்போலப் பரக்கும் யானையையுடையவாய் வலியையுடைய காட்டிற்குள்ளாகிய நாட்டினையுடையாய்! நீயோ பெரும! (புறம். 5) 6. கிள்ளியெடுக்கும் அளவினையுடையதொரு ஆலம்வித்து முளைத்து கொம்பர்களால் நெருங்கி மிகநிழலைப் பயந்தாற் போல. (நாலடி. 28) 7. சதங்கை களைந்த காலிலே ஒள்ளிய வீரக்கழலைக் கட்டி. இது சிறியோன் தொழில். (புறம். 77) 8. அவ்வியல்பினையுடையானொருவன் தன்னாண்டகைமையைக் கைவிட்டுச், சுடரிழாய்! என்னை நோக்கிக் கூறும் பல காரியங்களும் மாட்சிமைப்படுஞ் சொல்லைக் கேட்பாயாக. (கலி. 47) 256-ம் சூத்திரம் 1. யானைவந்து தாக்கினும் பாம்பு தன்மேல் வரினும் வலிய இடியேறு ஒலிப்பினும் தன்கருமாறாத மறத்தன்மை பூண்ட வாழ்வையுடைய. (பெரும்பாண். 134) |