2. யாம் நின்னைக் காணுமிடத்து வெருவுவோம். ஆதலால், எங் கூந்தலைத் தீண்டாதேகொள். நீ நீங்கென்றாள் தலைவி. தலைவனைக் கள்வர்போலச் சார்த்தியுரைத்தமையின் கள்வர் பொருட்டுத் தோன்றிய அச்சமென்றார். நச்சினார்க்கினியர் வெருவுதலென்னும் மெய்ப்பாடென்பர். (கலி. 87) 3. கழுத்தையெடுத்து மேல்நோக்கின் வாழமாட்டேமென்னுங் கருத்தினாலே கைகூப்பி வணங்கிப் பழகிக் கழுத்தை வளைத்துத் (தலையிறைஞ்சிக்) கடுமான்றேர்க்கோதையின் கால் வண்ணமேயன்றி மேல்வண்ணம் கண்டறியமாட்டா அரசுகள். கோதை--சேரன். (இ. வி. ப. 124) 4. தூரநின்று நான் செய்யாதவற்றைச் சொல்லிச் சினவாதே, நின்னாணையைக் கடப்பார் யார்? ஆணை--கட்டளை. (கலி. 81) 5. அழகு விளங்குகின்ற சாந்தினோடு அழகிய பட்டிமைப்ப வளைந்த குழையையணிந்த மகளிரைப்போல ஒடுங்கியிருக்கின்ற இருக்கை. (அகம். 236) 6. அச்சமே வழியாக உணர்த்தும்படி வருபவனுடைய பொய்ச்சூளுக்கு அஞ்சிப் புலவேனாகுவேன். (கலி. 75) 257-ம் சூத்திரம் 1. நாவினாலே வார்த்தைசொல்ல வல்லார் முன்னே சொல்லுதல் வல்லேனாகிய என்னைப் பிறர்முன்னே ஒன்றையுங் கல்லாத தன்மையேனாகக் காட்டியவள். ‘வல்லோர் முற்சொல் வல்லேன்’ என்றது தன் பெருமிதங் கூறியது. (கலி. 141) 2. போரிடத்து வெற்றியையுடைய குதிரைமீதே யிருந்து போர்த்தொழிலை நடத்துவேனாகிய என்னை அம் மாவல்லாத மடன்மாவிலே ஏறி அக்களத்தேயன்றி மன்றின்கண்ணே தன்னை உள்ளுவித்தவள். அடன்மாமேலாற்றுவேன் என்றது தறுகண் பற்றிவந்த பெருமிதம். (கலி. 141) 3. நீங்காத காதலையுடையராயினுஞ் சான்றோர் பழியொடு வரும் இன்பம் விரும்பார். எனவே புகழொடு வருமின்பத்தை விரும்புவர் என்றமையால் புகழ்பற்றிவந்த பெருமிதங் கூறியவாறு. (அகம். 112) 4. உலகத்தையெல்லாம் பாதுகாத்தலை முயலும் உள்ளத்தையுடையேனாகிய என்னை ஒருவர்பால் ஒன்றை யிரத்தலை |