பக்கம் எண் :

பொருளதிகாரம்89

முயலும் இன்னாதாகிய வருத்தத்தைச் செய்தவள். ‘புரவூக்கும் உள்ளத்தேன்’ என்றமையின் கொடைபற்றிய பெருமிதம்.

(கலி. 141)

5. தன்னகம் புக்க குறிய நடையையுடைய புறாவின் அழிவிற்கு அஞ்சித் துலைபுக்க, வரையாத ஈகையையுடைய வலியோனது வழியிலுள்ளாய், இதுவுமது.

(புறம். 43)

6. பலவகைப்பட்ட கரிய கூந்தலையுடைய பொதுப் பெண்டிரது பொருந்தாத புணர்ச்சியிடை என் மாலை துவள்வதாக. தார்குழைக என்றது துவளாமை குறித்தலின் காமம் பற்றிய பெருமிதம்.

(புறம். 73)

258-ம் சூத்திரம்

1. முறம்போலுஞ் செவியாகிய மறைப்பிடமாக வந்து பாய்ந்து மாறுபாட்டைச்செய்த புலியைக் கோபித்து.

(கலி. 52)

எனவே புலி பாய்ந்து தன்னுறுப்பைக் கடித்தலால் உறுப்பறையான் வந்த வெகுளி என்றார்.

2. நின்மகன் படைக்குத் தோற்றுப் புறங்கொடுத்தான் என்று பலர் கூறக்கேட்டு, என்மகன் மண்டியபோரிற் புறங் கொடுத்தானாயின் அவன் பாலுண்ட முலையை யறுத்திடுவேன்யானென்று கோபித்து.

(புறம். 278)

3. நேற்றுப் பகல் நின்னால் எறியப்பட்டவனுடைய தம்பி அகலினிடத்துப்பெய்த குன்றிமணியைப்போலக் கோபத்தாற் சுழலுங் கண்களையுடையனாகி.

(புறம். 300)

4. புலியைப் பொருத வலிய களிற்றின் சினம்போல இன்னுமாறாது கோபம்.

(புறம். 100)

5. எனது மிக்கவலிக்கு அஞ்சாதே மாறுபடுஞ் சினம் பெருகிப் புல்லிய வார்த்தைகளைக்கூறிய சினம்பொருந்திய அரசரை.

(புறம். 72)

6. யான்செய்த தவறில்லாதவிடத்து எங்ஙனஞ் சினப்பாய்.

(கலி. 87)

7. நெருப்புத் தன் வெம்மையாறுதற் கேதுவாகிய நிணமடைந்த கொழுவிய தடி (இறைச்சி). எரியாது பூத்துக்கிடக்கும் தழல்போலும் நிணந்தங்கு கொழுங்குறை எனினுமமையும்.

(புறம். 125)