1மற்று நகையை முன்வைத்ததென்னையெனின், ‘பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருட்கும்’ (249) இவை2என்னும் இயைபில்லனவல்ல என்றற்கு, விளையாட்டுப்பொருட்டாகிய நகையை முன்வைத்தானென்பது. அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்தான். இளிவரல் அதன்பின் வைத்தான்; அழுகையும் இளிவரலோடு இயைபுடைமையின். தானிளிவந்து பிறிதோர் பொருளை வியக்குமாதலின் இளிவரலின் பின் வியப்பு வைத்தான். வியப்புப்பற்றியும் அச்சம் பிறத்தலின் அச்சத்தை அதன்பின் வைத்தான். அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன்பின் வைத்தான். அவ்வீரத்தின் பயனாகிப் பிறர்க்கு வரும் வெகுளியை அதன்பின்னே வைத்தான். வெகுளிக்கு மறுதலையாகலானும் எல்லாவற்றினும் 3ஈண்டு ஓதுதற்குச் சிறந்ததாகலானும் முதற்க ணோதிய நகைக்கு இயை புடைத்தாகலானும் உவகையை அவ்வீற்றுக்கண் வைத்தானென்பது. இவ்வெட்டனுள் முதனின்ற நான்கும் முற்கூறுதற்கும், இறுதிநின்ற நான்கும் பிற்கூறுதற்கும் காரணம் வருகின்ற சூத்திரங்களானும் பெறுதும். மற்றிவ் வெட்டனோடுஞ் சமநிலை கூட்டி ஒன்பதென்னாமோ நாடகநூலிற்போலவெனின், அதற்கு ஓர் விகாரமின்மையின் ஈண்டுக்கூறியதிலனென்பது; 4அதற்கு விகாரமுண்டெனின் முன்னையெட்டனுள்ளுஞ் சார்த்திக்கொள்ளப்படும். அல்லதூஉம்,
1. மற்றுநகையை.........முன்வைத்தானென்பது என்றது. பண்ணைத்தோன்றிய பொருளோடு இவையும இயைபுடையனவே வேறல்ல என்பதை உணர்த்தவே விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்தானென்றபடி. விளையாட்டுக்கண் தோன்றும் எண்ணான்கு பொருளைக் கூறிய சூத்திரத்தோடு இயைபு காட்டவே இச்சூத்திரத்து விளையாட்டுப்பொருட்டாகிய நகையை முன்வைத்தானென்பது கருத்து. பண்ணை -- விளையாட்டு. 2. என்னும் - சிறிதும். 3. ஈண்டு என்றது ஈற்றினை. சிறந்தபொருளை முதலில் வைத்தலன்றி ஈற்றிற் கூறுதலுமுண்டு. அது,--‘சிறப்புடைப் பொருளைப் பிற்படக் கிளத்தல்’ என்பதனாலறிக. 4. அதற்கு -- சமநிலைக்கு. Êசமநிலை -- சமமாக நிற்றல். அஃதாவது மனம் விகாரமின்றிச் சாந்தமடைந்து நிற்றல். |