பக்கம் எண் :

பொருளதிகாரம்91

4. நும்மொடு நகைத்த வெள்ளிய எயிறு, இது தலைவி கூறியது.

(குறு. 169)

5. அகத்தே பொலிந்த மகிழ்ச்சியளாய் நாணினால் முகத்தை வளைத்து விரைய வணங்கினாள் (தாழ்த்தாள்).

(அகம். 86)

யான் தன்னைக் காணுந்தோறும் தான் பெரிது மகிழாளாய் (சிறிது மகிழ்ந்தவளாய்) ஒளிபொருந்திய நுதல் வியர்ப்ப நாணித் தலை வணங்கி அதிகம் வெளிப்படாது நகுதலையுடைய முகத்தை மறைத்த நல்ல நெற்றியையுடைய பெண்ணின் மனஞ் சிதைவுற்றமையை நெஞ்சே யறிந்திலை; அது உண்மையாதலை யானறிவேன்.

(இலக்கண பக். 592)

262-ம் சூத்திரம்

1. விண்ணின்கணுயர்ந்த வலியமலையின் பக்கத்தே ஒருவன் கண்ணானோக்கியதன்றி என்னொடு குளிர உரையாடியதுமில்லை. அவன் மலையுறை தெய்வமுமல்லன். அவன் கண்ணானோக்கிய அதற்கே ஒதிக்கு முற்பட்டுக் காது ஒருகுழை நெகிழ, ஒளிவிளங்குகின்ற மணியாற்செய்த பூண்கள் நெஞ்சொடுங் கழல, உடையும் பலதரம் நெடிது சோர்வுற்றன. அதன்காரணம் நீயறிகுவாய். அந்நோக்கினியல்பு கூறுமாறு எமக்கு எத்தன்மையது.

263-ம் சூத்திரம்

1. யான் தனது கூந்தலையும் நுதலையும் நீவி அழகிய மெல்லிய முலையை வருடலினால் மனங்கலங்கி உடம்பும் உள்ளம் போல உகுபவள்போல அல்குலின் மேலணிந்த நெகிழ்ந்த நூலையுடைய வஸ்திரத்தோடு சாருமிடமறியாது மெலியாதவள்போல்வாளாய் வலிந்து பொய்ம்மைசெய்து ஒடுங்கவும் யாமெடுத்து அணைக்குந்தோறும் தாமே உடன்பட்டெழுதலின் வேய்போலும் மென்றோள் நீண்ட அரிபரந்த கண்களையுடைய பேதையோடு நம்மை இம்மையுலகத்தன்றி உம்மையினும் கேளாந்தன்மையை அறிந்தனபோலும்.

264-ம் சூத்திரம்

1. ஒருநாள்போலப் பலநாளும் வந்து வருத்தும், நின்னை யொக்கும் நினது தழையும் என்னிடத்து நின்னைப் பாராட்டியும் யான் சொல்லுஞ் சொல்லை ஏற்றுக்கொள்ளாதும், தாய் எதிரே கழறி யுரைத்தலினாலே பெரிய அலருக்கு நாணியும் மயக்கமடைகின்ற மாதினுக்கு அவள் துயரை நீக்கும் மருந்தாயினும்; ஓரிடத்து நீ தொடக்கரிதலினாலே (அவளுக்கு) நோயைச் செய்தற்கேதுவாயது. நோய்செய்தது அதனால் நின்றழையும் நின்னையொக்கும் என முடிக்க.

(இ. வி. ப. 533)