பக்கம் எண் :

92மெய்ப்பாட்டியல்

265-ம் சூத்திரம்

1. தாய் இவளை வருந்த நோக்குந்தோறும் நடுங்கும் நெஞ்சினால் அவட்கு அறிவுறுத்தலின் நின்னெதிர் வருதற்கு நாணி மனைவயிற்பிரியலானாள். அதனை நீயறியாய்போலும். அவள் மனையிடத்தினின்று பிரியாத அதனால் புனைதார்மார்ப! என் நினைவிலள் அவள் என்று கூறுகின்றாய். உன்னைக்கண்ட இப்பொழுது அவள் பசலைநீங்கி உவகையடைந்தவாற்றைக் காண்பாய்.

(இ. வி. ப. 534)

266-ம் சூத்திரம்

1. இவள் யான் அணியினும் பூசினும் பிணியுழந்து வருந்திப் பல சுற்றத்தின் நடுநிற்பினும் நில்லாதவள்போல (தனிமையுற்று) சொல்லும்வகையறியாளாய்ப் பொழிகின்ற கண்ணீரைத் துடைத்து யானே செயலற மனஞ்சுழல்வாள் நின்னைத் தெளியுமாற்றை இறைவனே சொல்வாய்.

267-ம் சூத்திரம்

1. ஆயர்மகன் ஆயத்தோடே நாமாடுங் குரவைக்கூத்திலே நம்மை அருமைசெய்தான்போலே நோக்கி நமக்கு வருந்தத்தகும் நோயைச்செய்தல், நிறத்தையுடைய கண்ணையுடைய கொலையேற்றை யான் கொண்டேன் என்னு மனச் செருக்கன்றோ? அது வேறொன்றல்லவே என்றாள். இது புகுமுகம் புரிதல். எமக்கு வருத்தத்தைச்செய்தல் என்றதனால் இவளும் எதிர்நோக்கினாள் என்பது பெறப்படும்.

(கலி. 104)

2. தானட்ட புளிப்பாகரை இனிதென்று கணவனுண்டலின் ஒள்ளிய நுதலையுடையாளது முகம் நுட்பமாக மகிழ்ந்தது.

(குறு. 167)

3. நெஞ்சே இவனைப் பொய்சொல்ல விடேமென்று மாறுபட்டுக் கோபிக்கின் தப்பினேனென்று வணக்கஞ்செய்தலும் இவனுக்குப் பரிகாரமுண்டு. ஆதலான் நம்மை மறந்து ஒருகாலமும் நாம் மாட்சிமைப்பட்டிருக்க நினையாத நாணமில்லாதவனுக்கு இவ்வூடற் போரைத் தோற்று அதனாலுள்ள பயனைக் காண்பாய் என்று ஊடல் தீர்ந்தாள்.

(கலி. 89)

4. நின்னுடைய பாணன் நோவுசேர்ந்த திறப்பண்ணைப் பண்ணி எம்முடைய மனையிடத்தே நீசென்று சேர்ந்த பரத்தையர் மனையை என்னைக்கேட்டு வராதிருத்தலை யான்பெறின்.

(கலி. 77)

5. எமது அன்னையின் கழற்றுரைக்கும் உய்வேம்; சிறிதும் இரக்கம் பொருந்தாத வியலபோடுங்கூடிய பொய்ம்மொழியைக் கூறுகின்ற சேரிப்பெண்டிரின் அலரையுநீங்குவேம்.

(அகம். 65)